நகரவாசிகள்... நரகவாசிகள்!
ஈழத்து சோகங்கள் தொடங்கி இன்றைய விலைவாசி வேதனைகள் வரை தமிழர்களை வாட்டி வதைக்கும் இன்னல்களுக்கு குறைவில்லை. அதேநேரம், உலகத்து நாகரிகக் கோமாளிகளுக்கு நிகராகக் காதலர் தினம் கொண்டாடும் கூட்டத்துக்கும் இங்கே குறைவில்லை...
தமிழச்சி தங்கப்பாண்டியனின் ஆகச்சிறந்த கவிதை ஓன்று இன்றைய நகரவாசிகளின் கன்னத்தில் அறைகிறது...
ஒரு கர்ப்பிணியின் வாந்தியினை
எடுத்து உண்ட எத்தியோப்பியக்
குழந்தைகளின் பட்டினியைத்
தொலைக்காட்சியில் பார்த்த பின்பும்,
கலவி இன்பம் துய்த்த
அந்த இரவிற்குப் பின்தான்
முற்றிலும் கடைந்தெடுத்த
நகரவாசியானேன் நான்.
எல்லோரும் நகரவாசியாக மட்டும் அல்ல... நரகவாசியாகவும் மாறிக்கிடக்கும் நேரம் இது. அதனால், உரக்க ஒலிக்கட்டும் காதல் குரல்!

+ comments + 2 comments
காதலர் தினக் கோமாளி கூத்துகளை தமிழச்சியின் கவிதை கொண்டு விளாசிய விதம் அருமை! கல்விக்கு வழியில்லாத இந்த மண்ணில் கலவிக் கூத்துகளுக்கு மட்டும் குறைவில்லை!
காதல் என்பது உடல் ரீதியான ஒருவித பசி... துக்க வீட்டிலும்
வெட்கம் பார்க்காத அந்த உணர்வை சமூக ஆதங்கங்களோடு ஒப்பிட்டு
காதலர் தினம் கொண்டாடக் கூடாது என்பது தவறு. ஆனாலும்,
தமிழச்சியின் கவிதை ஒருகணம் நெஞ்சை உலுக்கியது.
சில வாரங்களாக கும்பல் பக்கம் கும்பல் கும்பலாய் பட்டையைக்
கிளப்புதே... இன்னும் புதுப்பொலிவு திட்டங்கள் ஏதும் இருக்கா சார்?
Post a Comment