Latest Movie :

மீடியாக்களை மிரள வைத்த 'கும்பல்' செய்தி!

2 ம் தேதி காலை பத்து மணிக்கு நம் கும்பல் பக்கத்தில் நாம் வெளியிட்ட செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பத்து நாட்களுக்கும் மேலாக திவாகரனை தேடும் பணி தீவிரமாக நடந்துவந்த நிலையில், 'தொட்டுவிடும் தூரத்தில் திவாகரன்' என்ற தலைப்பில் நாம் எழுதி இருந்தோம். அதில், நாம் எழுதி இருந்த விவரங்கள் அப்படியே இங்கு மீண்டும் தரப்படுகிறது...

தொட்டுவிடும் தூரத்தில் திவாகரன்?!


த்து நாட்களாக கண்ணாமூச்சி ஆடிய திவாகரன் ஒருவழியாக போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டார். அவருக்கு நெருக்கமான அத்தனை வட்டாரங்களையும் ஆராய்ந்து பார்த்து சலித்துப்பூன போலீஸ் அதிகாரிகள் கடைசியாக, திவாகரன் குடும்பத்தினரையே நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து மிரட்டத் தொடங்கினார்கள். அதற்கு உரிய பலன் உடனடியாகக் கிடைத்திருக்கிறது. தமிழகத்துக்கு வெளியே பதுங்கி இருந்த திவாகரன் போலீஸ் அதிகாரிகள் சிலரைத் தொடர்புகொண்டு பேசிவிட்டார். என்னென்ன வழக்குகள் போடுவீர்கள் என்பதைச் சொன்னால்தான் உங்களின் நடவடிக்கைக்கு உடன்படுவேன் என திவாகரன் சொல்ல, அதிகாரிகள் வழக்கு குறித்து விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி, இன்றோ நாளையோ திவாகரன் கைது விவகாரம் உறுதியாக அறிவிக்கப்படும் எனத் தெரிய வருகிறது.

- கும்பல்


நாம் எழுதிய செய்தி இரண்டாம் தேதி இரவு 11 மணிக்கு உறுதியானது. வெளிமாநிலத்தில் பதுங்கி இருந்த திவாகரன் பொலிசாரிடம் பேசியபடி திருச்சியில் வந்து சரண்டர் ஆனார். திருச்சி புறநகர் பகுதி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபல மீடியாக்களே திவாகரன் பிடிபட்ட தகவலை உறுதிப்படுத்த முடியாமல் திண்டாடிய நிலையில், நமக்குக் கிடைத்த மிக உறுதியான தகவலை வாசகர்களுக்கு அடுத்த கணமே வழங்கி இருந்தோம். நம் செய்தி அப்படியே உண்மையாகி இருப்பதை வாசகர்களுக்கு பெருமகிழ்வோடு தெரிவிக்கிறோம்!

- ஆசிரியர் குழு
Share this article :

+ comments + 8 comments

பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நிஜமாகவே காலையில் உங்களின் செய்தியைப் படித்து சும்மா ஏதோ அடிச்சு விடுறாங்க என்று தான் நினைத்தேன். உங்களின் கணிப்பு அப்படியே பலித்ததைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன். இப்பவும் திவாகரன் கைதான செய்தியை நீங்கள் தான் முதன்முதலாக வெளியிட்டிருக்கிறீர்கள். ப்ளாக்ஸ்பாட் மூலமாகவே மீடியாக்களுக்கு சவால் விட முடியும் என நிரூபித்து விட்டீர்கள். நன்றி...

2 February 2012 at 11:30

EXCLUSIVE MATTER... CONGRATS KUMBAL!

கும்பல் பணி தொடரட்டும்... திவாகரனுக்கு ஒரு வலர்ப்பு மகன் இருக்கிறார் என்கிற தகவலையே முதலில் நீங்கள் தான் வெலியிட்டீர்கள். இப்போது அதை வைத்தே அரஸ்ட் நடந்திருப்பதாக ஸ்குரோலிங் நியூஸ் ஓடுகிறது. சூப்பர் சார்...

2 February 2012 at 20:15

பிரமாதமான புலனாய்வு... சமீப காலமாகத்தான் 'கும்பல்' செய்திகளைப் படித்து வருகிறேன். இப்போது தினமும் காலையில் எழுந்ததுமே கும்பலை பார்ப்பது தான் என்னுடைய வேலை. இன்னும் அசத்தலான செய்திகளை எதிர்பார்க்கிறேன்!

Anonymous
3 February 2012 at 04:42

சூப்பர் பதிவு. தொடரட்டும் உங்களின் அரசியல் அலப்பறை...

sara
16 November 2012 at 01:42

This comment has been removed by a blog administrator.

16 November 2012 at 01:44

This comment has been removed by a blog administrator.

16 November 2012 at 03:34

This comment has been removed by a blog administrator.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger