தொட்டுவிடும் தூரத்தில் திவாகரன்?!
பத்து நாட்களாக கண்ணாமூச்சி ஆடிய திவாகரன் ஒருவழியாக போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டார். அவருக்கு நெருக்கமான அத்தனை வட்டாரங்களையும் ஆராய்ந்து பார்த்து சலித்துப்பூன போலீஸ் அதிகாரிகள் கடைசியாக, திவாகரன் குடும்பத்தினரையே நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து மிரட்டத் தொடங்கினார்கள். அதற்கு உரிய பலன் உடனடியாகக் கிடைத்திருக்கிறது. தமிழகத்துக்கு வெளியே பதுங்கி இருந்த திவாகரன் போலீஸ் அதிகாரிகள் சிலரைத் தொடர்புகொண்டு பேசிவிட்டார். என்னென்ன வழக்குகள் போடுவீர்கள் என்பதைச் சொன்னால்தான் உங்களின் நடவடிக்கைக்கு உடன்படுவேன் என திவாகரன் சொல்ல, அதிகாரிகள் வழக்கு குறித்து விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி, இன்றோ நாளையோ திவாகரன் கைது விவகாரம் உறுதியாக அறிவிக்கப்படும் எனத் தெரிய வருகிறது.
- கும்பல்
Labels:
dhivakaran,
jayalalitha,
kumbal,
sasikala,
கும்பல்,
சசிகலா,
திவாகரன்,
ஜெயலலிதா

+ comments + 3 comments
எந்த மீடியாவும் இப்படியொரு செய்தியை இதுவரை வெளியிடவில்லை. உண்மையிலேயே கும்பல் சொல்வதுபோல் திவாகரன் வளைக்கப்பட்டுவிட்டாரா? எனது போலிஸ் சோர்ஸுகள் பலரிடமும் பேசியபோது, மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைத்தது. திவாகரன் விசயத்தில் உண்மையில் என்னதான் நடக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் திவாகரன் சேலத்தில் கைது செய்யப்பட்டதாகப் பரபரப்பு கிளம்பியதே... அது பொய்யா? தயவு செய்து இது குறித்து விரிவான கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
திவாகரனை பேட்டி எடுத்துப் போடுங்க தலைவா... நீங்க எழுதும் கட்டுரைகள் உண்மையாகவே சூப்பரா இருக்கு. அடிக்கடி அதிரடியான பேட்டிகளை வெளியிட்டால், இன்னமும் தூள் கிளப்பும்.
thanks for starting a wounderful scheme sir
Post a Comment