ஜெயலலிதா - சசிகலா தொடர்...
நக்கீரனின் அடுத்த திட்டம்!
நக்கீரனுக்கும் ஜெயாவுக்குமான அக்கப்போர் ஆரம்பித்து விட்டது. சாதாரண காலத்திலேயே ஜெயலலிதாவுக்கு எதிராக சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளும் நக்கீரன், இனி இன்னமும் அதிவேகத்தில் ஆசிட் அடிக்கும் திட்டத்தில் இருக்கிறது. போலீஸ் தரப்பில் நக்கீரனை முடக்கும் வேலைகள் தீவிரமாக நடப்பதால், அதற்கு பதிலடி கொடுக்க கோபால், காமராஜ் இருவரும் இப்போதே தயாராகி விட்டார்கள்.
'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்கிற தலைப்பில் கட்டுரை எழுதிய போதே ஜெயலலிதா இதற்கு பெரிய அளவில் கோபப்படுவார் , கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவார் என்பது நக்கீரனுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும், அந்தத் தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றால், அதன் பின்னணியில் நக்கீரன் மிக முக்கியத் திட்டங்களை வைத்திருக்கிறது என்பது உண்மை.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் அட்டைபடத்தை மிகக்கோரமாக நக்கீரன் வெளியிட்டதாகவும், அப்போதே நக்கீரனுக்கு எதிரான வேலைகளை போலீஸ் தரப்பு ஆரம்பித்து விட்டதாகவும் சொல்கிறார்கள். அதாவது, முகம் முழுக்க வியர்வை வடிய, பற்கள் ஆவேசமாகத் தெரிவதைப்போல , ஜெயலலிதாவின் படத்தை நக்கீரன் வெளியிட்டது உண்மைதான். அதுதான் முதல்வரை உச்சபட்ச கடுப்பில் ஆழ்த்தியதாக சொல்கிறார்கள்.
இந்த விஷயம் சென்னையில் உள்ள நக்கீரனுக்கு ஆதரவான போலீஸ் அதிகாரிகள் சிலர் மூலமாக தெரியவர, கோபாலும் காமராஜும் உஷாரானார்கள். 'இனி அடக்கி வாசித்து பயன் இல்லை. அதிரடி அட்டாக் தான் சரிப்படும்' என திட்டமிடப்பட்டு தான் மாட்டுக்கறி மேட்டர் தயாராகி இருக்கிறது. நக்கீரன் எதிர்பார்த்தபடியே தமிழகம் முழுக்க தாக்குதல் நடந்தது. நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது. ஒரே நாளில் நக்கீரனின் பெயர் மீண்டும் பரபரப்பு வளையத்துக்கு வந்தது.
பொன்னையனின் மறுப்பு அறிக்கையும், கருணாநிதியின் கண்டன அறிக்கையும் மாட்டுக்கறி
மேட்ட்டரை மேலும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. கார்டன் வட்டாரத்தில் இந்த விஷயம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'யார் அந்த உமர் முக்தர்? அந்த நிருபரை அரெஸ்ட் பண்ணுங்க... அதுக்கு அப்புறம் கோபால், காமராஜ் கைது பற்றி பார்க்கலாம் ' என கார்டனில் இருந்து உத்தரவு வந்ததாம். ஐயோ , பாவம்... உமர் முக்தர் என்ற பெயரில் நக்கீரனின் நிருபரே இல்லை என்பது கார்டனுக்குத் தெரியவில்லை. நக்கீரனின் இனையாசிரியரும் எதற்கும் தயன்காதவருமான காமராஜ் கை வண்ணத்தில் வெளியான கட்டுரைதான் அது!
போலீஸ் நடவடிக்கைகள் தீவிரமாகும் இந்த நேரத்தில், அதற்குத் தடைபோடும் விதமாகவும், ஜெயலலிதாவை மேலும் கடுப்பாக்கும் விதமாகவும் அடுத்த அதிரடுக்குத் தயாராகிவிட்டது நக்கீரன் தரப்பு. ஜெயலலிதா - சசிகலா நட்பு பற்றிய தொடரை சீக்கிரமே ஆரம்பிக்கப் போகிறது நக்கீரன். இதன் மூலமாக பல விஷயங்களை அம்பலப்படுத்த நக்கீரன் திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய தகவலை கார்டனுக்கு அனுப்பி இருக்கிறது உளவுத்துறை.
'வரட்டும் பார்க்கலாம்...' என கார்டன் தரப்பு பதில் சொன்னால், போலீஸ் அதிரடிகள் உடனடியாக நக்கீரனுக்கு எதிராக ஆரம்பிக்கும். 'ப்ளிஸ் வெயிட்...' என பதில் வந்தால், காவல்துறை அமைதி காக்கும். பார்க்கலாம்... அடுத்த அதிரடியை!
- கும்பல்






+ comments + 1 comments
இப்படி எழுதுவதற்கும் ஒரு தில் வேண்டும்.... உங்களை போன்று தொடை நடுங்கி பசங்கள் அல்ல நக்கீரன் என்று மீண்டும் நிருபித்து விட்டது...இனியாவது உருப்படியான கட்டுரைகள் எழுத கற்றுகொளவும்... சப்பை செய்திகளுக்கு எப்படி ஒரு பழைய பார்வை எப்படியோ அப்படியே கும்பலும் ஆட்சியாளர் வெண் சாமரம் வீசும் ஒரு இணய பத்திரிகை
Post a Comment