மகளிரணிச் செயலாளர் ஆகிறார் கனிமொழி!
அண்ணன்களின் தடை, அப்பாவின் தயக்கம் அனைத்தையும் கடந்து தி.மு.க.வின் முக்கியப் பொறுப்பு கனிமொழியின் கைக்கு கிடைக்க இருக்கிறது. திகார் சிறையில் 150 நாட்களைக் கடந்து வெளியே வந்த கனிமொழிக்கு கட்சியில் மிக முக்கிய பதவி கிடைக்கும் என பரவலான பேச்சு எழுந்தது. 'கனிமொழிக்கு கொடுப்பதாக இருந்தால், எனது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பையே விட்டுக் கொடுக்கிறேன்' என அறிவித்தார் சற்குண பாண்டியன்.
துணைப் பொதுச் செயலாளர், இளைஞ்ரணி பொதுச் செயலாளர் என பல பதவிகள் கனிமொழிக்காக பரிசீலிக்கப்பட்டன. இதற்கிடையில், கனிமொழிக்கு இளைஞ்ரணி பொறுப்பு கிடைத்துவிடுமோ என அஞ்சிய ஸ்டாலின், உடனடியாக தமிழகம் முழுக்க வலம் வந்தார். இளைஞ்ரணி பொறுப்புக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களே வரவேண்டும் என அதிரடி உத்தரவும் பிறப்பித்தார். கனிமொழிக்கு செக் வைக்கும் விதமாகவே இவை அனைத்தும் நடந்தது.
ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரான அன்பில் பொய்யாமொழியின் மகனான மகேஷுக்கு இளைஞ்ரணி செயலாளர் பொறுப்பு கிடைக்க ஸ்டாலின் ஏற்பாடு செய்திருக்கிறார். தனது மகன் உதயநிதிக்கு பொறுப்பு வாங்கிக் கொடுத்தால், அது வாரிசு அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் என்பதாலேயே இந்த ஏற்பாடாம்.
கனிமொழிக்கு இளைஞ்ரணி பொறுப்பு கிடைத்துவிடாதபடி எப்படி ஸ்டாலின் தடுத்தாரோ... அதேபோல் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைத்துவிடக் கூடாது என அழகிரி தடுத்தார். அதனால், கனிமொழிக்கு மகளிரணி செயலாளர் பதவி கொடுக்க கருணாநிதி முடிவெடுத்திருக்கிறார்.
தி.மு.க.வின் மிக முக்கிய வட்டாரங்களே இந்த செய்தியை நம் கும்பல் குழுமத்துக்கு உறுதிபடுத்தி சொல்கிறார்கள். மகளிரணி பொறுப்பு சாதாரணமானது தான் என்றாலும், கனிமொழிக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் தான் அது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அடுத்தபடியாய்
கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் தான் கட்சியைக் கைப்பற்றும் போட்டி நடக்கும் என்கிறார்கள் சீனியர் புள்ளிகள்.
- கும்பல்


+ comments + 5 comments
சபாஷ், சரியான போட்டி... நாலு வார்த்தை சரிவரப் பேசத் தெரியாத ஸ்டாலினும், இலக்கியவாதி கனிமொழியும் மோதினால் நன்றாகத்தான் இருக்கும். நம்ம அழகிரி அண்ணன் என்ன பண்றார்னு நீங்க சொல்லவே இல்லையே...
கனிமொழிக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு தான் சரியாக இருக்கும். கடந்த ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி, பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு விடிவு ஏற்படுத்திக் கொடுத்தவர் கனிமொழி. கலைஞர் இதனை உணர்ந்து பொறுப்பு வழங்க வேண்டும். அட்ரஸே தெரியாத மகேஷுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தால், கட்சியே அம்போவாகிவிடும்.
தளபதியாரே! திருச்சி மகேஷுக்கு ட்ரை பண்றதுக்கு பதிலா ஈரோடு மகேஷுக்கு ட்ரை பண்ணலாமே 4 பேருக்காவது தெரியும்....!!! இன்னும் பயிற்சி வேண்டுமோ...!!!!
puduchu ulla poduga sir,
katu seruki katu
Post a Comment