முகமூடிக்காக தினமும் 1 லட்சம் ரூபாய்க்கு மீன்
‘முகமூடி’ படத்துக்காக தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மீன்கள் வாங்கி ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், ‘முகமூடி’. ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே உட்பட பலர் நடிக்கின்றனர். மிஷ்கின் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக வானகரம் மீன் மார்க்கெட்டில் செட் அமைத்து நடந்து வந்தது. மீன் மார்க்கெட் தினமும் காலை பத்தரை மணிக்கு முடியும். அது முடிந்ததும் மாலை ஆறுமணி வரை அங்கு ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டில் 40 லட்சம் செலவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.
படப்பிடிப்புக்காக தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மீன்கள் வாங்கப்பட்டன. ஒரு நாள் பயன்படுத்தப்படும் மீன், மறுநாள் பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடுவதால் ஷூட்டிங் நடக்கும் ஏழு நாட்களுக்கும் தினமும் மீன்கள் வாங்கி ஷூட்டிங் நடத்தியதாகப் படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

Post a Comment