சசிகலா இடத்தில் அனுராதா!
கார்டனில் இருந்து ஒருவழியாக சசிகலா வெளியேற்றப்பட்டு விட்டார். அவருடைய இடத்துக்கு அடுத்து யார் வருவது என்கிற போட்டி இப்போதே தொடங்கி விட்டது. சசிகலாவின் உறவு வட்டாரத்தை சேர்ந்த 14 பேர்களை கட்டம் கட்டிய ஜெயலலிதா இளவரசி, அனுராதா இருவருடைய பெயர்களை மட்டும் தவிர்த்தார்.
சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவியான இளவரசி மீது ஜெயலலிதாவுக்கு எப்போதுமே தனிப்பட்ட இரக்கம் உண்டு. ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் பணியாற்றிய போது தான் ஜெயராமன் மின்சாரம் தாக்கி இறந்து போனார். அன்றைய தினத்தில் இருந்து இளவரசி கார்டனில் தான் இருக்கிறார். ஆனாலும் இப்போதைய விவகாரத்தில் இளவரசி மீதும் ஜெயலலிதாவுக்கு கோபம் இருப்பதாக மன்னார்குடி உறவுக்காரர்களே சொல்கிறார்கள்.
இப்போதைய நிலையில் ஜெயலலிதா எவ்வித கூபமும் காட்டாமல் இருப்பது அனுராதா மீதுதானாம். ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட முன்னாள் எம்.பி. தினகரனின் மனைவி தான் அனுராதா. ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் அனுராதா டாக்டர் வெங்கடேஷின் சொந்த சகோதரி. கணவர், சகோதரர் இருவருமே ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்டு இருக்கும் நிலையிலும், அனுராதா மீது ஜெயலலிதா அன்பு பாராட்டுவது கார்டன் வட்டாரத்தை திகைக்க வைத்திருக்கிறது.
சசிகலாவின் இடத்துக்கு வரப்போவது அனுராதா தான் என்கிற பேச்சு பரபரப்பாக அடிபடத் தொடங்கி விட்டது. சசிகலாவின் உறவு வட்டாரம் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு விட்டதாக மகிழ்ச்சி அடைந்தவர்கள் அனுராதாவின் நிலையை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். ஆனால், சசிகலாவுக்கு நெருக்கமானவர்களோ சீக்கிரமே அனுராதாவும் கார்டனை விட்டு வெளியே வருவார் என்கிறார்கள்.
தன்னை பற்றி முழுக்க அறிந்தவர்களில் ஒருவரையாவது உடன் வைத்திருக்க நினைக்கும் ஜெயலலிதா அனுராதாவை வெளியேற்ற போவது கிடையாது என அடித்துச் சொல்லும் சிலர், சசிகலாவின் இடம் அனுராதாவுக்கு தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். பார்க்கலாம் கார்டனின் அடுத்த ஆட்டம் என்ன என்று..!
Labels:
தமிழகம்


+ comments + 1 comments
அனுராதா... இவங்களும் மன்னார்குடி மைந்தி தானே... இவர் மட்டும் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்துவிடுவாரா என்ன?
Post a Comment