சென்னை, டிச. 15: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகம் தனக்குள்ள உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காது என்று சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. முதலில், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் கருப்பசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 15 நிமிடங்களுக்கு பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
!மேலும் படிக்க...

Post a Comment