தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக் ஜெயலலிதா,சசிகலா மோதல் தான். பெங்களூரு வழக்கில் ஜெயலிதாவுக்கு குறைந்த பட்ச தண்டனையாவது கிடைத்துவிடும் என உறுதியாக நம்பும் சிலர் கார்டன் வட்டாரத்தில் சிலருடைய மனபோக்குக்கு தூபம் போட... அதன் விளைவாகவே கார்டனில் , கழகம் முளைவிட்டு இருக்கிறது. சசிகலாவின் ஆசியுடன் உளவுத்துறைக்கு கொண்டுவரப்பட்ட டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மூன்று மாதத்திற்குள் விழுப்புரம் மாவட்டத்துக்கு தூக்கியடிக்கபட்டார். அடுத்த படியாய் கோட்டையில் நிழல் புள்ளியாக கோடி நாட்டிய முன்னால் இந்திய ஆட்சி பணியாளர் திரு. பன்னீர் செல்வம் இரண்டு நாட்களுக்கு முன்பு டம்மியான பொறுப்புக்கு மாற்றப்பட்டார். தலைமை செயலக அலுவலகத்திற்குள் நுழையவே கூடாது என அவருக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. அடுத்த படியாக கார்டனின் செல்வாக்கு புலியாக உலாவந்த கருத்தையா பாண்டியன் அம்மாவின் கோபத்துக்கு ஆளானார். இனி என் முகத்திலேயே முழிக்க கூடாது என சொல்லி அவரை வெளியே அனுப்பினார் முதல்வர் ஜெயலலிதா. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், பத்து வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைசாமி திடிரென காத்திருபோர் பட்டியலில் மாற்றப்பட்டு இருக்கிறார்.
!மேலும் படிக்க...
>> மேலே செல்ல ....

Post a Comment