வரும் 12.12.12. ரஜினிகாந்தின் பிறந்த நாள். மிக அபூர்வமான அந்த நாளை சிறப்பாகக் கொண்டாட இருக்கிறார் ராகவா லாரன்ஸ். ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ரஜினி குறித்த பாடல்களை விஜய் ஆண்டனி இசையில் தனி ஆல்பமாக உருவாக்கி இருக்கிறார். இதுகுறித்து
ரஜினியிடமும் பேசி அவருடைய அனுமதியையும் ஆசியையும் பெற்றிருக்கும் ராகவா லாரன்ஸ், ''ரஜினி சார் ரசிகர்களுக்காகவே இந்த ஆல்பத்தை நான் உருவாக்கி இருக்கிறேன். ரஜினி சார் பிறந்த நாள் என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். ஆனால் இந்த வருடம் மிகச் சிறப்பான தினம் என்பதால் அதை இன்னும் சிறப்பாகக் கொண்டாட ஆல்பம் உருவாக்கினேன். ரஜினி சாருக்கு இதில் ரொம்ப மகிழ்ச்சி..." என பூரிக்கிறார் ராகவா லாரன்ஸ்.


Post a Comment