முதன் முறையாய் அறிவிக்கிறது கும்பல்!
அஜித்தின் அடுத்த படத்துக்கு பீனிக்ஸ் என்கிற தலைப்பை வைக்க விவாதம் நடந்தது. ஆனால், செண்டிமெண்டாக அந்த தலைப்பு அஜித்துக்கு பிடிக்காமல் போக... மறுபடியும் தலைப்பு பிடிக்க தவியாய்த் தவித்தது விஷ்ணுவர்தன் டீம். ஒருவழியாக 25 புது தலைப்புகளை விஷ்ணுவர்தன் டீம் ரெடி செய்துகொண்டு போக, அதிலும் அஜித்துக்கு திருப்தி இல்லை. இதற்கிடையில் ஷாலினியோடு அவரே சேர்ந்து விவாதித்து 'கர்வம்' என்கிற தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறார். விஷ்ணுவர்த்தனுக்கும் அந்த தலைப்பு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.
எப்போதுமே கர்வம் காட்டாமல் மிக எளிமையாக வலம் வருபவர் அஜித். ஆனால், கர்வம் என்கிற தலைப்பை அவரே தேர்ந்தெடுத்ததன் காரணம் என்னவோ?!
.jpg)
+ comments + 1 comments
Super title thala!!!!!!!!!!!!!!!!!
Post a Comment