Latest Movie :

சென்னையை மிரட்டும் நீலம்!

பொதுமக்களே உஷார்...


சென்னைக்கு அருகில் 550 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இருக்கிறது. 'நீலம்'  பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல் இலங்கை திரிகோணமலையில் இருந்து சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை அறிக்கைகள் சொல்கின்றன. நாகப்பட்டினத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு இடைப்பட்ட பகுதிகளில் புயல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக இன்று மதியத்துக்குப் பிறகு கனமழையும் பலத்த காற்றும் வீசக் கூடும் என்கிறார்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தார்.
இயற்கையின் விளையாட்டை நாம் எந்நாளும் தவிர்க்க முடியாது. இத்தகைய காலகட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான் நம்மை சேதத்திலிருந்து காப்பாற்றும். கடந்த வருடம் தானே புயலால் வடக்கு மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான சேதமும் பேரழிவும் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. அரசுத் தரப்பு எச்சரிக்கையும், பொதுமக்களின் விழிப்புணர்வும் இல்லாததுதான் அத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்தன.


தானே பாதிப்பில் வீழ்ந்த மரங்கள்...

நீலம் புயலும் அத்தகைய சோக நிகழ்வாக அமைந்துவிடக் கூடாது. அதற்கான முன்னெச்சரிக்கையோடு அரசுத் தரப்பு அதிவேகமாக தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிய பாதுகாப்பான பகுதிகளில் மக்களை தங்க வைத்தும், மழை நீர் தேங்காதபடி உரிய வடிகால் வசதிகளை செய்தும்   24 மணி நேரமும் அதிகாரிகள் கண்துஞ்சாமல் செயல்பட வேண்டிய தருணமிது.

அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக பொதுமக்களும் பொதுநல ஆர்வலர்களும்   ஒருமித்து செயல்பட வேண்டும். இன்றைய நாளில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாக  இருக்கும். அதற்குத் தக்கபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைகொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியே அனுப்பாமல் பாதுகாக்க வேண்டும். சுகாதார வசதிகளைப் பேணிக்கொள்ள வேண்டும்.

நமக்கான பாதுகாப்பு நம் கையில்தான் இருக்கிறது. இயற்கை கோரத் தாண்டவம் ஆடும் போது சாதாரண மனித சக்திகளால் என்ன செய்ய முடியும்?அதன் போக்குக்குத் தக்கபடி  நம்மைத் தற்காத்துக் கொள்வதே நலம்!

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger