Latest Movie :

''சூப்பர் ஸ்டார் சுந்தரபாண்டியன்'' - தினமலர் விமர்சனம்


இதுநாள்வரை நட்பு, நண்பர்களின் காதலுக்கு உதவி, அதற்காக அடிதடி, அடாவடி ஆகிய கதையம்சம் கொண்ட படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த சசிகுமார், முதன்முதலாக காந்தார காதலனாக களம் இறங்கி கலக்கி இருக்கும் கலர்புல் படம்தான் "சுந்தரபாண்டியன்".

மதுரை, தேனிபக்கம் குறிப்பிட்ட சமூகத்தை ‌சார்ந்த பெரிய இடத்துப்பிள்ளை நாயகர் சுந்தரபாண்டியன் எனும் சசிகுமார். நண்பனின் காதலுக்கு உதவப்போய் இவரே நாயகி அர்ச்சனா அலைஸ் லெஷ்மி மேனனின் மனம் கவர்ந்தவராகிறார். அப்புறம்? அப்புறமென்ன? அர்ச்சனா அலைஸ் லெஷ்மியின் காதலன், முறைமாமன், அம்மணி அர்ச்சனா கல்லூரிக்கு போகும் வரும் வழிகளில் முறைக்கும் மாமன்கள்... எல்லோரும் மனதளவில் விரோதியாகப்போகும் சுந்தரபாண்டியனை, எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட இருந்தே குரல்வளை அறுக்க பார்க்கின்றனர். ஆனால் அவர்க‌ள் அத்தனை பேரையும் நண்பர்களாகவே பார்க்கும் சுந்தரபாண்டியன், தன் காதல் திருமணத்திற்கு முதல்நாள் புகட்டும் பாடம் தான் "சுந்தரபாண்டியன்" மொத்தபடமும்! இப்படி ஒரு காதலுக்கும் - நட்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கதையை எத்தனைக்கு எத்தனை அற்புதமாக தந்திருக்கிறார் இப்படத்தின் அறிமுக இயக்குநரும், சசிகுமாரின் உதவி இயக்குநருமான எஸ்.ஆர்.பிரபாகரன் என்பது தான் இப்படத்தின் பெரியபலம்!

ரஜினி ரசிகர் சுந்தரபாண்டியனாக சசிகுமார், பேருந்தில் அலப்பறை பண்ணுபவர்களை அடக்கும் ஒரு சில காட்சிகளும், பில்-டப் ப்ளாஷ் போக்குகளும்‌ போதும் அவரது இயல்பான எடுப்பான நடிப்பிற்கு கட்டியம் கூறுவதற்கு! மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார்?! சசியின் நடிப்பையும் துடிப்பையும் பார்த்து நாயகி அர்ச்சனா எனும் லெட்சுமி மேனனுக்கு மட்டுமல்ல... பொதுவான தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சசிகுமார் மீது இனம்புரியா காதல் வருவதுதான் சுந்தரபாண்டியனின் வெற்றி! க்ளைமாக்ஸில் நல்ல நட்பிற்கு விளக்கம் அளிக்கும் காட்சிகளில் சுந்தரபாண்டியன் சசிகுமாரையும் மீறி, இயக்குநர் பிரபாகரனும் அவரது வசனங்களும் ஸ்கீரினில் தெரிவது சசிகுமாருக்கும், சுந்தரபாண்டியனுக்கும் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி ‌என்றால் மிகையல்ல!

கதாநாயகி அர்ச்சனாவாக அறிமுகமாகியிருக்கும் லெட்சுமி மேனன், தமிழ்சினிமாவில் தற்போது நிலவும் குடும்ப பாங்கான கதாநாயகியர் பற்றாக்குறையை பக்காவாக நிரப்புவார் என நம்பலாம்! அம்மணி காதல் காட்சிகளிலும் சரி, கல்தா கொடுக்கும் காட்சிகளிலும் சரி, அவ்வளவு ஏன்? அப்பாவின் ஒப்புதலுக்காக கண்ணீர் மல்க நிற்கும் காட்சிகளிலும் கூட தன் இயல்பான திமிரான நடிப்பால் படத்தை மேலும் ஒருபடி மேலே தூக்கி பிடித்திருக்கிறார் பலே! பலே!

சசிகுமார் - லெஷ்மி மேனன் ஜோடி மாதிரியே ஆரம்ப காதலன் அறிவழகனாக வரும் இனிகோ பிரபாகரன், முறைபையன் ஜெகனாக வரும் விஜய் சேதுபதி, எல்லோருக்கும் சீனியர் புவனேஷ்வரன் ‌எனும் குட்டையனாக வலம் வந்து, பாதியிலேயே பரிதாபகரமான முடிவை தேடிக் கொள்ளும் அப்புக்குட்டி, நண்பன் முருகேசனாக வரும் பரோட்டா சூரி, பரஞ்ஜோதி - செளந்தர ராஜா, அப்பா கேரக்டர்கள் நரேன், தென்னவன், அம்மா கேரக்டர்கள் துளசி, சுஜாதா, தோழி நீது நீலாம்பரன் உள்ளிட்ட எல்லோரும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரும்பலம்!

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் நான்கு மட்டுமல்ல, பின்னணி இசையும் சுகராகம்! சி.பிரேம் குமாரின் ஒளிப்பதிவு, வி.டான்போஸ்கோவின் படத்தொகுப்பு, திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சி, தினேஷின் நடனம் உள்ளிட்டவைகளும் படத்தின் பெரும் பலம்! இவையெல்லாவற்றையும் விட ‌எஸ்.ஆர்.பிரபாகரனின் எழுத்தும்-இயக்கமும், எம்.சசிகுமாரின் நடிப்பும், தயாரிப்பும் சுந்தரபாண்டியனின் முன்பாதியை காமெடியாகவும், பின்பாதியை கருத்து நெடியாகவும் சீன் பை சீன் தூக்கி நிறுத்தி இருக்கின்றனர் பேஷ் பேஷ்!

ஆக மொத்தத்தில் குறை என்று பெரிதாக எதுவும் சொல்ல முடியாத "சுந்தரபாண்டியன் - சூப்பர்பாண்டியன்!"

கருத்துகள் 

ராஜாராம் - Madurai ,IndiaSep 20 2012 4:52PM
சசி உங்கள பார்க்கும் போது எனக்கு இப்படி நண்பன் இல்லையே என்று தொனும்
Muthukumar - Riyadh ,SenegalSep 20 2012 4:41PM
நல்ல படம். அனைவரும் சிறப்பா நடிச்சு இருக்காங்க. எதார்த்தமான படம். எல்ல படத்திலும் ஹீரோ நண்பரை ஒரு படி கீழே தான் வச்சு இருப்பார், அடிபார். இந்தபடத்தில் அப்படியெல்லாம் இல்லாதது எதார்த்தத்தை கொடுகிறது படத்தில் ரெண்டு சின்ன fight தான். ஸ்க்ரீன்ப்ளே சிறப்பா இருப்பதால் உங்களுக்கு வன்முறை உணர்வு வருகிறது.
சரவணகுமரன் - Nagapattinam ,IndiaSep 20 2012 4:15PM
கிளைமாக்ஸ் ரொம்ப அருமை.அனால் இவ்வளவு குத்து வெட்டுக்கு பிறகு வசனம் பேசி உயிருடன் இருப்பது எதுகிரமதிரி இல்ல.மொத்தத்தில் சசிகுமார் தன்னை நம்பி திற்றேகு படம் பார்க்க வரவங்களுக்கு எமற்றமல் தொடர்ந்து ஜெய்சிகிடிருகிறார்.சசிகுமார்-சமுத்ரகனி படங்கள் வெற்றி அடைவதில் தவறில்லை
SUJAY - visakhapatnam ,IndiaSep 20 2012 2:54PM
very nice movie.
பெரியகருப்பன் தேவர் - Chennai ,IndiaSep 20 2012 2:06PM
நம்ம ஆளுக படம் எப்படி ல தோர்ர்க்கும்
சேட்ட சேது - madurai ,IndiaSep 20 2012 1:33PM
ரொம்ப நல்ல படம்... அறிமுக இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
veelaiyan - usilampatti ,IndiaSep 20 2012 1:30PM
over buildup. time waste.
கருப்பசாமி பாண்டியன் - Theni ,IndiaSep 20 2012 1:09PM
படம் மெகா ஹிட்,சசிக்கு ரசிகர் மன்றம் வைக்கலாம்,
சாமிநாதன் லோன்சா - singapore ,SlovakiaSep 20 2012 12:15PM
வெரி வெரி குட்
ஆனந்த் - karur ,IndiaSep 20 2012 11:52AM
சசி குமார் படம் எப்போதும் ஒரு டிப்பிறேண்ட இருக்கும் .
தமிழன் - துபாய் ,United StatesSep 20 2012 11:42AM
படம் நல்ல காமெடியா இருக்கு. ஆனால் அதே நண்பன் துரோகம் இந்த படத்திலும். சசி கொஞ்சம் இனி மாத்தி படம் பண்ணுங்க . இரண்டாம் பாதி பார்த்த மாதிரியே தான் உள்ளது. முதல் பாதி சிரிப்பு வெடி. இரண்டாம் பாதி வன்முறை நெடி.
கார்த்திகேயன் - Vellore ,IndiaSep 20 2012 11:38AM
இந்த வருடத்தின் நல்ல படம் ..
பிரவீன்kumar - chennai ,IndiaSep 20 2012 11:37AM
குட் குட் குட் குட் 5௦ தடவ பாக்கலாம் சூப்பர் சூப்பர்
Muthukaruppan - Melmangalam, Periyakulam, Theni. ,IndiaSep 20 2012 11:24AM
எனக்கு எங்க ஊர் ஞாபகம் வருது , சுப்பர் படம், இந்த படத்தின் Screen Play பெஸ்ட், Thanks சசிகுமார். முக்குலத்தின் வாழ்க்கைய கூறும் மற்றொரு படம்.
Gobi - Undi nadu ,IndiaSep 20 2012 11:19AM
GooD old story in a new angle except climax. சசி Ella படத்துலயும் ஒரே மாதிரி கிளைமாக்ஸ் வச்சா போர் அடிக்குதுப்பா.
அருண்குமார் - Sivakasi ,IndiaSep 20 2012 11:07AM
உசிலம்பட்டியை பற்றிய ஆரம்ப அறிமுகம் இதுவரை நான் கேட்டிராறது. ஆனாலும் தானை தலைவர் மருத்துவர் சீனிவாசனின் படம் உள்ள போஸ்டரை அங்கே ஓட்ட விடாதது அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம். டிரைலர் சிறப்பா இல்லையேனு நினைச்சு ஏமாந்து இருந்திராதீங்க, யதார்த்த படங்களில் பாசிடிவ் அப்ரோச் பெரும்பாலும் செட் ஆகாது. ஆனால் முழுக்க முழுக்க பாசிடிவான ஒரு யதார்த்த படம்தான் இந்த சுந்தர பாண்டியன். அண்ணாமலை, முத்து வரிசையில் இந்த சுந்தரபாண்டியன் பெயரும் புகழ் பெரும்.
ந.இசக்கிவேல் - dindigul ,IndiaSep 20 2012 11:00AM
பிலிம் இஸ் வெரி குட் சசி அக்ட சூப்பர்
சரவணா - chennai ,IndiaSep 20 2012 9:28AM
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம்...
sridar - chennai ,IndiaSep 20 2012 8:16AM
What a film….superb
PONNUSAMY - Riyadh ,SenegalSep 20 2012 2:36AM
எனக்கு புடிச்ச படம் நன்றாக ரசித்து பார்த்த படம் சசிகாமர் நடிப்பும் லக்ஷ்மி மேனன் நடிப்பும் நன்றாக இருந்தது ,இயக்குனர் கதையும் திரைக்கதையும் வசனமும் மீண்டும் ஒரு சசிகுமாரை பார்த்தது போல் இருந்தது அப்புக்குட்டி நடிப்பு என் இதயத்தை விட்டு போகமருக்கிறது என் மனமார்ந்த நன்றிகள் பல ..........anaivarukkum
sarvanan - chennai ,IndiaSep 20 2012 12:21AM
சூப்பர் படம் சசி குட் அக்டோர்
krishnan - chennai ,IndiaSep 19 2012 11:56PM
Sasi is obsessed with the same subject - going extreme ends to help his friends in their love, selfish friends, voilence. 70% of the scenes in this movie we have already seen either in his own moive or some other movie. So nothing new in this film. The only plus point in this movie is Laxmi Menon and Sasi's father. Brilliant performances.
j.p - coimbatore ,IndiaSep 19 2012 9:03PM
NANBANE NAMBALE KONNALUM SETHALUM SOLLAKUTATHU ATHANDA NATPU-what a dialogue.suber movies.
அருன்ஷங்கர் - TIRUCHENGODE ,IndiaSep 19 2012 8:39PM
வெரி சூப்பர் குட் பிலிம். சசி அக்டிங் சி ரேஅல்லி வெள். அண்ட் எ நியூ பாசே ஹெரோஇனே அக்டிங் இஸ் ரேஅல்லி வெள் வெள். இ லைக் திஸ் மொவயே வெரி மச். நோர்மல்லி இ லைக் தேனி அண்ட் மதுரை ஊற்றோஊணீண. திஸ் மொவயே ஊற்றோஊணீண இஸ் பசெத் ஒன டென்இ ஏரியா. சோ இ லைக் திஸ் மொவயே வெரி வெரி மச். திஸ் மொவயே டியாலோகே இஸ் அலசோ வெள். டோடல்லி ஆல் இஸ் வெள்.
கருப்பசாமி - THENI ,IndiaSep 19 2012 7:35PM
படம் மெகா ஹிட்,சசி சிறந்த நடிப்பு ,ரசிகர் மன்றம் வைக்கலாம்,! வாழ்க சசி,வளர்க உன் புகழ்,
வெங்கடேஷ் யாதவ் - tirunelveli ,IndiaSep 19 2012 7:26PM
படம் சூப்பர் தினமலர் விமர்சனம் சூப்பர்
s.yuvaraj - tripur ,IndiaSep 19 2012 3:50PM
நல்ல படம்!
Raameeparithi - Dubai ,United StatesSep 19 2012 3:39PM
நல்லா அனுபவிச்சு பார்த்தேன்...! உசிலம்பட்டி பின்னணியில் ஒரு சுகமான காதல் கவிதை...! சற்று வித்தியாசமாய் சொல்லப்பட்ட சினிமா. வாழ்த்துக்கள் இந்த பட குழுவினருக்கு!
சசி kumar - trichy ,IndiaSep 19 2012 2:06PM
குட் பிலிம்,,,சூப்பர்
விமல் - chennai ,IndiaSep 19 2012 12:24PM
சுப்பர் படம். நான் கள்ளர் அதுக்காக மட்டும் சுப்பர்நு சொல்லல காதல் நட்பு பத்தி சொல்லி இருக்கது சுப்பர். நான் பார்த்ததில் எனக்கு ரொம்ப பிடித்த படம். கதாநாயகியோட அத்த கிராமத்து முகம் சுப்பர். நீக அறிமுகம் பண்ணும் ஒவ்வொரு நாயகியும் கிராமத்து பெண்ணாக இருப்பது தான் இன்னும் சுப்பர்
பிரசாத்.R - sathankulam ,IndiaSep 19 2012 12:10PM
படம் சூப்பர், பட் எல்லா பிரிண்ட்சும் girlskaga பிரண்ச காலி பண்ணுறாங்க.. girls இஸ் வெற்றி dangerous
Archita - Abu Dhabi ,United StatesSep 19 2012 10:24AM
சூப்பர். படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் கதாநாயகி லெட்சுமி மேனன்தான். மிக பெரிய கண்கள், கொஞ்சம் திமிர், கொஞ்சம் அழகு, கொஞ்சம் காதல். கண்டிப்பாக இவக ஒரு ரவுண்டு வருவாக.
r.suganya - chennai ,IndiaSep 19 2012 9:18AM
romba nalla movie
பன்னீர் செல்வம் - salem ,IndiaSep 19 2012 8:10AM
இது மாதிரி நல்ல சினிமா நிறையே வரணும்.குட் பிலிம் சார்.மனதிற்கு இதமா இருக்கு
சுளை - doha ,ReunionSep 19 2012 2:12AM
நல்ல அறுமையான படம்...வாழ்த்துகள்..i லவ் யு சசி அமீர் பாலா நியூ டிரேக்டர்.....
joshi - paris ,FranceSep 19 2012 1:38AM
எம்மாடி கிருஸ்ணவேணி ,உனக்கு படம் பிடிக்கல்லன்னா விட்டுப்புட்டு அண்ணாத்தைக்கு சமைச்சுக்கொடுபியா...இதில வந்து தேவையில்லாத வம்பு வேறு.சசிக்கு முன்னாடி நீயெல்லாம் வரமுடியுமா.....
tamil - madurai ,IndiaSep 19 2012 1:04AM
இந்த பிலிம் பத்தி தப்பா பேச எந்த டாக் உம் உரிமை கிடயாது:) இந்த மாதிரி பிலிம் பாக நாம கொடுத்து வைசுருகனும் சூப்பர் பிலிம் :) அர்ச்சனா you will have great future :)
prakash - jeddah ,SenegalSep 19 2012 12:54AM
படம் ஓகே அனால் கிளைமேக்ஸ் romba மொசெம் tooooo voilence
வேலு - nellai ,IndiaSep 18 2012 3:11PM
ரொம்ப பில்ட் அப் பண்ற மாதிரி இருக்கே? படம் போய் பார்த்து கருத்த சொல்லுதேன்
ராதாகிருஷ்ணன் இ.v - tirupur ,IndiaSep 18 2012 2:37PM
நல்ல நண்பர்கள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம்.
kumar - kadayanallur ,IndiaSep 18 2012 2:15PM
புது முகம் இனிகோ பிரபாகரன் நல்ல வரவு
VELMURUGAN - vriddhachalam ,IndiaSep 18 2012 1:56PM
பைன் மாவே.
muruga - chennai ,IndiaSep 18 2012 1:06PM
படம் என்றால் இது தான் புதுமுக இயக்குனருக்கு மன மார்ந்த நன்றி
கமல்ராஜ் எ - KUMBAKONAM ,IndiaSep 18 2012 1:01PM
சசி ரொம்ப காமெடி பண்றார்.நல்ல படம். தமிழ் சினிமா ரொம்ப நாளா எதிர்பார்த்தது தான் இதுல இருக்கு. கீப் இட் அப். சசி.
Devan - Chennai ,IndiaSep 18 2012 12:57PM
சிங்கம் சிங்கம் தான் டா. சூப்பர் Movie
rajamohan - cuddalore ,IndiaSep 18 2012 12:57PM
நல்ல படம்
பூர்ணா - Trivandrum ,IndiaSep 18 2012 12:25PM
லவ் பண்ணா சசிகுமார் மாறி பையன தான் லவ் பண்ணனும்.. என்ன ஸ்மார்ட். என்ன ஒரு பாசம் லவ் பண்ற பொண்ணு மேல.. லவ் யு சசி.. :)
கிருஷ்ணவேணி - chennai ,IndiaSep 18 2012 11:19AM
இந்த சசிகுமார் எப்போழுதும் ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார். கிளைமாக்ஸ் பயங்கர வன்முறை குத்துவதும் வெட்டுவதும். இதில் காமெடி என்னவென்றால் ஹீரோ உள்பட அத்தனை பேரும் அத்தனை வெட்டுகளும் கத்தி குத்துகளும் வாங்கிகொண்டு உயிரோடு இருக்கிறர்கலாம். அதெப்படி எல்லா படத்திலும் ஒரே மாதிரி வெட்டி வெட்டி குத்துகிறீர்கள். சசி, தயவு செய்து யாரும் குழந்தைகளுடன் போய் விடாதிர்கள். பிறகு அவர்கள் வீட்டிலும் கத்திஉடனும் வேறு பல படத்தில் காட்டும் ஆயுதங்களுடம் அலைவார்கள். தயவு செய்து புதியதாக யோசித்து படம் எடுங்கள். மக்களுக்கு புத்திமதி சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்களை கெடுகதிர்கள். இந்த படத்தை டிவி இல் வேறு போட்டு தொலைவார்கள் பசங்களை எல்லாம் கெடுபதற்கு.
விக்டர் - Kumbakonam ,IndiaSep 18 2012 10:58AM
Superrrrrrrrrr.
Moorthy - Dubai ,United StatesSep 18 2012 10:20AM
அருமையான திரைகதை, நல்ல காமெடி, சிம்பிள் கல்லூரி காதல் கதை. படம் பார்த்த பொது ஒரு 1990 வருடம் சினிமா பார்த்த போது உள்ள சுகம் உண்டானது.
A.பழனி - TIRUVALLORE ,IndiaSep 18 2012 8:56AM
நல்ல படம், நான் முனு முறை பார்த்தேன்
அக்கீம் - batalagung ,IndiaSep 18 2012 5:42AM
குடும்பத்துடன் காணவேண்டிய நல்ல தமிழ் படம் ( ரொம்ப நாளைக்கு பிறகு) சசிகுமாருக்கு நன்றி
விஜயராகவன் - chennai ,IndiaSep 18 2012 4:45AM
எல்லா தமிழ் படங்களிலும் காதல் தான் மைய கருத்தே. இதில் மட்டும் என்ன?அதே தான். அப்புறம் என்ன? ஆஹா ஓஹோ. சமீப கால திரைப்படம் எதாவது குடும்ப பொறுப்பு, கடமையை வலியுறுத்தி வந்திருக்கிறதா?எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இதே நிலை தான். அபூர்வமாக பயணம்,டோனி போன்ற வித்தியாசமான படங்கள் எப்போதாவது வருகின்றன. அவை தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது. என்ன செய்வது?ரசனை அப்படி.
sivakumar - chennai ,IndiaSep 18 2012 4:17AM
nice பிலிம் இன் திஸ் இயர் 2012 .
bala - chennai ,IndiaSep 18 2012 12:12AM
After பருத்தி வீரன் i saw This good பிலிம்.
Kuppusamy - Urachikkottai ,IndiaSep 17 2012 11:16PM
படம் மிக அருமை , சசிக்கு என் இனிய congrats
Nagaraj - Sharjah ,United StatesSep 17 2012 10:47PM
நல்ல மெகா சீரியல் படம் ... ஒரு தடவை பார்க்கலாம்....
m radha - channai ,IndiaSep 17 2012 9:58PM
very nice movie
ganesh - nungambakkam ,IndiaSep 17 2012 7:36PM
மூவி எக்சலென்ட்
லிங்கேஸ்வரன் - Akkasalai - Tuticorin ,IndiaSep 17 2012 7:27PM
வெரி குட் பிலிம்ஸ் ......ஐ லைக்.......மச்சி .. தேங்க்ஸ் டு......ச.ர.பிரகாரன்
டுபாக்கூர் ரவி - chennai ,IndiaSep 17 2012 7:17PM
சமீபத்தில் ரிலிஸ் ஆன 100 படங்களில் இது தான் NO 1 excellent movie , எல்லோரும் தியேட்டர்ல போய் பாருங்க படம் சூப்பரோ super , 100 % entertainment.......
E .Nagarajan - Madurai ,IndiaSep 17 2012 6:05PM
Should be Watch with family in theatre . All are done the perfect Job .
angudevi - sankarankovil ,IndiaSep 17 2012 6:04PM
super sasi good
arun - chennai ,IndiaSep 17 2012 4:33PM
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் லச்சுமி மேனன் acting சசிகுமார் ஹீரோஇசம் , புரோட்டா சுரி காமெடி எல்லாம் சூப்பர். song எல்லாம் சூப்பர்.கிளைமாக்ஸ் fight மட்டும் நம்பும் படி இல்லை இதை தவிர மற்றதெல்லாம் சூப்பர் .
லதா ஜோதிமணி - Coimbatore ,IndiaSep 17 2012 4:31PM
Superbbbbbbbbbbbbbbb வெரி வொர்த் டு சி தி பிலிம் ஆல் கிரெடிட் கோஎஸ் டு சசி kumar
ஆனந்தன் - kanchipuram ,Sep 17 2012 2:43PM
சூப்பர் பிலிம்....
prabu.v - Poncherry ,IndiaSep 17 2012 12:56PM
story and screenplay very cute,Totally the movie is very best. Prabu - Pondy
rakul - Bangalore ,IndiaSep 17 2012 11:04AM
வெரி குட் பிலிம் வொர்த் டு see
santhi - Abu Dhabi ,United StatesSep 17 2012 10:06AM
படம் என்றால் இப்படி எடுக்கணும். என்ன அருமையான குடும்ப கதை. சசிகுமார் சார் உண்மையில் சூப்பர்.
kaarthickprabhu - bangalore ,IndiaSep 17 2012 9:57AM
அண்ணனுக்கு இன்னொரு மாபெரும் வெற்றி .......................அண்ணனின் ரசிகன் என சொல்வதில் பெருமை படுகிறேன் ...............சூப்பர்
pathamuthu - srivilliputtur ,IndiaSep 17 2012 9:12AM
பட்டய கிளப்புது படம், அப்பா செண்டிமெண்ட் காட்சிகள் அற்புதம்
விசு கும்பகோணம் - KUMBAKONAM ,IndiaSep 17 2012 7:16AM
kudumbathudan parkum vakayil eduthulla director ku nandri
வெங்கடேஸ்வர பாபு - Trichy ,IndiaSep 17 2012 5:32AM
குடும்பத்துடன் காணவேண்டிய நல்ல தமிழ் படம் ( ரொம்ப நாளைக்கு பிறகு) சசிகுமாருக்கு நன்றி
r.ranganathan - gobi638452 ,IndiaSep 16 2012 9:03PM
After long i saw a good film thanks sasi
ramsundar - saudi arebia ,SenegalSep 16 2012 8:56PM
பிலிம் இஸ் சூப்பர்
Sasi - Chennai ,IndiaSep 16 2012 8:22PM
சூப்பர்ப்,
Nihal - Al Khobar ,SenegalSep 16 2012 6:30PM
சூப்பர்
annan - erbil ,Turks & Caicos Is.Sep 16 2012 6:12PM
படம் என்றால் இது தான் புதுமுக இயக்குனருக்கு மன மார்ந்த நன்றி ,,,,,
Saravanan - Dubai ,United StatesSep 16 2012 3:34PM
படம் சூப்பர்....... சசிகுமார் நடீப்பு சூப்பர்...... சூரி கலக்கல்
.மேலூர்.மனோகரன். - kualalumpur. ,MaldivesSep 16 2012 3:27PM
படம் 'சூப்பர்'...! அசின்...நயன்தாரா...வரிசையில் தமிழ் திரை உலகுக்கு அழகான ஓர் வரவு லட்சுமி மேனன்.
முருகன் - Sivakasi ,IndiaSep 16 2012 2:44PM
முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதியில் ஓகே. காமெடி ரொம்ப நல்ல இருக்கு.
செல்வகுமார்.s - chengam ,IndiaSep 16 2012 2:39PM
ரொம்ப சூப்பர் படம். ஜாலியா பார்த்துட்டு மனசு முழுசா நினைசுகிட்டே வரலாம்.
ram - madurai ,IndiaSep 16 2012 2:34PM
படம் முதல் பாதி ஜாலி இரண்டாம் பாதி கதை சரியானது ஆனால் எடுத்த விதம் சரியில்லை
malar - navi mumbai ,IndiaSep 16 2012 2:22PM
the film was soo good worth to pay the cost of the ticket
guna - dharmapuri ,IndiaSep 16 2012 2:14PM
Nice movie
பொன்னுசாமி - kuwait ,KuwaitSep 16 2012 2:10PM
வெற்ற்றி
ponnusamy - fahaheel ,KuwaitSep 16 2012 2:08PM
குட்
ரமேஷ் - Dubai ,United StatesSep 16 2012 1:18PM
படம் சூப்பரோ சூப்பர்!!! nice film good family entertaiment movie, i do much like film.
பால்ராஜ்.கே - Chennai ,IndiaSep 16 2012 8:39AM
படம் சூப்பரோ சூப்பர்!!! நட்பின் அர்த்தத்தை புரியவைத்துள்ளனர் படக்குழுவினர்!!!!!!!!!
நாகேந்திரன் - pollachi ,IndiaSep 16 2012 6:29AM
எவரோட எல்லா படமுமும் super
raja - thanjavur ,IndiaSep 16 2012 3:05AM
படம் நல்லா இருக்கு குடுபத்துடன் பார்க்கலாம்
ganesh - abu dhabi ,United StatesSep 16 2012 1:16AM
நான் லேட்டஸ்ட் பார்த்த படத்திலயே சூப்பர் இதுதான். கணேஷ் அபு தபி
selvam - chennai ,IndiaSep 15 2012 10:52PM
விரசம் இல்லாத அருமையான படம், all family members must watch the film( பெண்களும் தைரியமாக தியேட்டருக்கு வரலாம்)
Muthukumar - Avinashi ,IndiaSep 15 2012 10:17PM
Very very very superb பிலிம். டோன் மிஸ் இட். arumayana படம். காமெடி suspense movie
ராஜா - dubai ,IndiaSep 15 2012 10:09PM
ரொம்ப நல்லா இருக்குது... கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்...
suresh - Chennai ,IndiaSep 15 2012 9:41PM
நல்ல படம்..... சசி இஸ் குட்
மதன் - chennai ,IndiaSep 15 2012 9:18PM
படம் அருமை. இந்த வருடத்தின் சிறந்த படம் என்றால் மிகை அல்ல. பாடல்கள் அருமை. மொத்தத்தில் NO 1.
Andromeda - chennai ,IndiaSep 15 2012 7:28PM
Nice movie worth to watch it.
பார்த்திபன் - TIRUPUR ,IndiaSep 15 2012 7:11PM
படம் சூப்பர்........................
R.Bharanitharan - salem ,IndiaSep 15 2012 7:08PM
Good Family Entertainer Movie.
Share this article :

+ comments + 1 comments

21 September 2012 at 22:03

ithu jathiya adipadaiya vechi edutha padam. nanban kaathalitha pen ivarai kaathalipaaram nanbanai poda pudunginu sollitu ivarum kaathalipaaram. athu mattumallamal same story epa pathalaum orey mathiriyana padam edukurathu.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger