கணவரை நம்பி காசு போட வேண்டாம் என தேவலோக நடிகையை பலரும் எச்சரிக்கைசெய்கிறார்களாம். ஆனால், 'நஷ்டமே ஆனாலும் பரவாயில்லை... அவருக்காக நான் எதையும் செய்வேன்' என உறுதியாக நின்று படத்துக்காக பணத்தை இறைக்கிறாராம் நடிகை. மனைவிக்கு சிக்கலைக் கொடுக்காத அளவுக்கு படத்தை சிக்கனமாக முடித்து, சேட்டிலைட் விற்பனையிலேயே போட்ட முதலை எடுக்கத் தயாராகி வருகிறார் குமார இயக்குனர்!
பெரிய இடத்து வாரிசு முழுவதுமாக தன்னுடைய கடன்களை பைசல் பண்ணி விட்டாராம். 'இனி என்னால் உங்களுக்கு எவ்வித சங்கடமும் வராதுப்பா' என தந்தையிடம் வாரிசு கண்கலங்க... ஆறுதலாக சில வார்த்தைகள் சொல்லி அனுப்பினாராம் சூப்பர்!
'என்னுடைய சொந்தக் கதையை படமாக்கப் போகிறேன்... அதில், என்னை சங்கடப்படுத்திய நபர்கள் அத்தனை பகலைப் பற்றியும் பகிரங்கமாக சொல்லப் போகிறேன்' என முழங்கி வந்த இரண்டெழுத்து 'கும்' நடிகை அந்த எண்ணத்தை தலை முழுகிவிட்டாராம். வெளியே இருந்துவந்த கடுமையான மிரட்டல்கள்தான் காரணமாம்!
பிரமாண்ட இயக்குனரை நம்பி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் காத்துக் கிடப்பது எனத் தவிக்கிறாராம் புயல் காமெடியார். 'இன்னும் ஒரு மாதம்தான் கெடு' என இம்சை இயக்குனரிடம் காலக்கெடு விதித்திருக்கும் காமெடியார், வேறு இயக்குனர்களிடம் கதை கேட்கவும் தயாராகி விட்டாராம்.
மரியாதைக்குரிய ஞானி விரைவில் இன்னும் இரண்டு புத்தகங்கள் எழுதப் போகிறாராம். அதில், ஒன்று... சமீபத்தில் மறைந்த அவருடைய மனைவியை பற்றியதாம்! மனைவி மீது இந்தளவுக்கு பாசமாக இருக்கும் ஞானியார் மகன்களோடு மட்டும் மௌனப் போராட்டம் கடைபிடிக்கிறாராம்.
தலைவன் என்கிற பெயரில் ஹீரோவாக வேஷம் கட்டும் உயிர்த் தோழியின் அக்கா மகன் படத்தை கார்டனில் போட்டுக் காட்டி ஆசி வாங்க பல மாதங்களாக காத்திருக்கிறாராம். கார்டனின் கதவுகள் இன்னும் திறக்கவே இல்லை.அதனால் படத்தை ரிலீஸ் பண்ணாமல் காத்திருக்கிறாராம் பாஸ்!
Post a Comment