ஸ்பெக்ட்ரம் சர்ச்சைகளுக்கு அதிரடியாக பதில் சொல்லிவரும் ஆ.ராசா அடுத்தபடியாய் தன் மீதான கறைகளை ஒரேயடியாய் துடைத்துப்போட தனி சேனல் தொடங்கும் முடிவில் இருக்கிறார். தன் தரப்பு நியாயங்களை சொல்ல மீடியாக்களின் துணை இல்லாமல் தவிக்கும் ஆ.ராசா இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசியிருக்கிறார். ''சன் டி.வி. என்னை எப்போதுமே புறக்கணிக்கும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், கலைஞர் டி.வி.யும் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறது. நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அத்தனை மீடியாக்களும் என்னிடம் தனி இன்டர்வியூ கேட்டு துரத்தினார்கள். புதிய தலைமுறைக்கும் என்.டி.டி.வி.க்கும் மட்டுமே நான் பேட்டி கொடுத்தேன். அந்த பேட்டிகள் என்னை பெரிய அளவுக்கு மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றன. ஆனால், கலைஞர் டி.வி.யில் இன்றுவரை என்னிடம் யாரும் பேட்டி கேட்கவில்லை. நீங்கள் சரி எனச் சொன்னால் இப்போதே தனி சேனல் ஆரம்பிக்க நான் தயார். சன், கலைஞர் டி.வி.க்களை விட என்னுடைய சேனல் தி.மு.க.வின் கொள்கை முழக்க தளமாக விளங்கும்!" என கருணாநிதியிடம் ஆ.ராசா விரிவாகப் பேச, கருணாநிதிக்கும் அந்தப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். அதனால், சீக்கிரமே ஒரு செய்தி சேனல் தமிழ் உலகுக்கு புதிதாக வர இருக்கிறது. அதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்யத் தொடங்கிவிட்டார் ஆ.ராசா. டெல்லியில் இருக்கும் மீடியா ஆட்கள் சிலரின் துணையோடு பக்கா செட்டப்பில், பரபரப்பு, விறுவிறுப்பு என ஆங்கில சேனல்களுக்கு நிகரான சேனலாக ராசாவின் சேனல் இருக்குமாம். தமிழகத்தில் இருந்து தரமான(?) பத்திரிக்கையாளர்களை தேர்ந்தெடுக்கும் வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டதாம்.
புதிய தொலைக்காட்சிக்கு 'ஸ்பெக்ட்ரம் டி.வி' என பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பது நம் அபிப்பிராயம்!
- கும்பல்

+ comments + 4 comments
ஆ.ராசா சார்... உங்க டி.வியில் எனக்கொரு இடம் கொடுங்க!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அமுக்கப்பட்ட பணம் சேனலாக வெளியே வரப் போகிறதா? நல்லபடி வரட்டும். சன், கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு அடுத்தபடியாய் ராசாவின் டி.வியும் தி.மு.க. சேனலாக வரட்டும். இன்னும் எத்தனை சேனல்கள் வந்தாலும் தி.மு.க.வை காப்பாற்ற முடியாது என்பது மட்டும் உண்மை!
SUN T.V.KKU POTTIYAKA PUTHIYA THALAIMURAI VELUTHTHU VANGUKIRATHU. RAAJA T.V. ELLAAM EMMATHTHIRAM?
உண்மையிலேயே ராசா சேனல் ஆரம்பிக்கப் போகிறாரா? இல்லை, கலைஞர் டி.வியை மிரட்டுவதற்காக கலைஞரிடம் அப்படி பேசி இருக்கிறாரா? எப்படியோ மக்களின் பணம் இப்படி சேனலா சீரழிகிறது...
Post a Comment