சிங்கள இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி!
சிங்கள இனவெறி அரசின் இராணுவத்தினருக்கு சென்னை தாம்பரத்தில், இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டித்திருக்கிறது.
''கடந்த 2009 மே மாதம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் போரில் தமிழின மக்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசுக்கு, தொடர்ச்சியாக இந்திய அரசு துணை போவது தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். போரின்போது சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா பல்வேறு வகைகளில் உதவி செய்துள்ளது. ஒரு மாபெரும் இன அழிப்பைச் செய்து, சர்வதேசப் போர்க் குற்றவாளி என அனைத்துலக நாடுகளின் கண்டனத்துக்குள்ளாகியுள்ள சிங்கள இனவெறி அரசின் இராணுவத்தினருக்கு இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்கிறது.
மேலும், இலங்கையிலிருந்து தமிழகம் வருபவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஏற்கனவே சுட்டிக்காட்டியும்கூட, தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல், தமிழகத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க இந்திய அரசு அனுமதி அளித்திருப்பது, தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் விரோதமான இந்திய அரசின் போக்கையும், தமிழக மக்களையும், தமிழக அரசையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
முள்வேலி முகாம்களுக்கும் தமிழர்கள் மீதான அடக்குமுறை, தமிழகத்தில் சந்தேகத்தின் பேரில் சிறப்பு முகாம்களில் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்படும் கொடுமை, தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் என தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராகச் செயல்படும் இந்திய அரசின் போக்கை கண்டிக்கிறோம். இராணுவப் பயிற்சிக்காக தமிழகம் வந்துள்ள சிங்கள இராணுவத்தினரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் இல்லையேல் விடுதலைச் சிறுத்தைகள் அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எச்சரிக்கிறோம்!" என ஆவேசமாக தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.
சிங்களக் கோடி எரிப்பு போராட்டத்தில் வன்னியரசு...
இதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சீக்கிரமே சென்னையில் கண்டன போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறது. இதற்கிடையில் அடுத்தடுத்து ஈழ விவகாரத்தில் தீவிரம் காட்டும் சிறுத்தைகள் கட்சியை முடக்கும் வகையில் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களை வழக்குப் போட்டு வளைக்க க்யூ பிராஞ்ச் தீவிரமாக இருக்கிறது. கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு மீது ஏற்கனவே சில ஜோடிப்பு வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது!


+ comments + 7 comments
வன்னியரசு போர் நடந்த நேரத்தில் ஈழத்துக்கே போய் வந்தவர். இவர்க;ள் எத்தனை வழக்கு போட்டாலும் அவரைப் பொன்றவர்களை பயமுறுத்த முடியாது.
வன்னி அரசுவை மட்டும் அதிமுக அரசு குறிவைப்பது ஏன்? ஈழத்துக்குப் போய் வந்தது மட்டுமே காரணமா? இல்லை, கட்சிக்குள்ளேயே இருக்கும் சிலர் அவரைப் பற்றி போட்டுக் கொடுக்கிறார்களா?
vanniyarasukkum thirumavalavanukkum mothal enkiraarkale... unmaiya? thiruma or vanniyitam interview etuththu potavum...
வன்னிஅரசு கட்டுரைகளையும் பேட்டிகளையும் தொடர்ந்து படிப்பவன் நான். அவர் மீது அரசுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? செங்கல்பட்டு அகதிகள் முகாமில் நடக்கும் அட்டூலியங்களை விட அதிகமான அட்டூலியங்களை வன்னியரசு செய்துவிட்டாரா என்ன? கடந்த சட்டமன்றத் தேர்தலில் வன்னியரசுக்கு சீட் கொடுக்கக்கூடாது என திருமாவளவனிடம் ஈழத்துரோகம் செய்த சில போலீஸ் அதிகாரிகளே வற்புறுத்தி இருக்கிறார்கள். கடந்த ஆட்சியிலும் போலீஸ் வன்னியரசுவை இப்படித்தான் பலிகடாவாக ஆக்கியிருக்கிறது. இந்த ஆட்சியிலும் இதுவே தொடர்கிறது. இதெல்லாம் நல்லதற்கா?
வன்னியரசு நல்லவரா கெட்டவரா? எழுத்துக்களை படித்தால் உணர்வாளர் என்பது புரிகிறது. ஆனால், வெளி வட்டாரத்தில் அவரைப் பயங்கரவாதியாகச் சொல்கிறார்கள்.
Thiruma vazhga...
vanni vazhga...
திருமாவளவனைப் பாராட்டி கலைஞர் எழுதியிருக்கும் கட்டுரையைப் பாரீர் பாரீர்...
முரசொலியில் படியுங்கள்
Post a Comment