அமைதிப்படை பார்ட் - 2
புரட்சி இயக்குனர் மணிவண்ணன் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். தீவிர உடற்பயிற்சியால் உடல்நலம் தேறியிருக்கும் மணிவண்ணன் இதுவரை 49 படங்களை இயக்கி இருக்கிறார். அடுத்தபடியாக ஐம்பதாவது படத்தை இயக்க இருக்கிறார். மணிவண்ணனின் ஆஸ்தான நடிகர் சத்யராஜ்தான் கதாநாயகன். இப்போதைக்கு படத்துக்கு அமைதிப்படை பார்ட் - 2 எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. பெயர் மாற்றம் செய்யப்படலாம் என்கிறார்கள். வழக்கமான கேலி, கிண்டலை கலந்தடிக்கும் திரைக்கதையை தீவிரமாக உருவாக்கி வருகிறார் மணிவண்ணன். ஈழம் தொடங்கி ஸ்பெக்ட்ரம் வரையிலான பல சம்பவங்களை அரசியல் கலப்போடு கலந்து பட்டையைக் கிளப்பும் காமெடிப் படமாக உருவாக்கப் போகிறார்களாம்.

+ comments + 2 comments
Inamana iyakkunarukku vazhthukkal...
மணிவண்ணனின் ஐம்பதாவது படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். புரட்சிகரமான கருத்துக்களை திரையுலகில் தொடர்ந்து பரப்பி வரும் மணிவண்ணன் நிச்சயம் பாராட்டத்தக்கவர்.
Post a Comment