பிரச்சனைகளுக்கும் அமீருக்கும் எப்போதுமே பெவிக்கால் பிணைப்பு. இருக்கிற பிரச்சனைகள் எல்லாம் போதாது என இப்போது பெப்சிக்கு தலைவராகவும் ஆகப்போகிறார் அமீர். பெப்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு இன்று நாமினேஷன் தாக்கல் செய்தார் அமீர். அவரை எதிர்த்து சீனியர் நடிகர் விசு போட்டியிடப் போகிறாராம். இதைவைத்தே அமீரின் வெற்றி உறுதியாகிவிட்டது என்கிறார்கள் பெப்சி உறுப்பினர்கள்.
ஆனாலும், அமீருக்கு ஆளும்கட்சியின் ஆதரவு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் பெப்சியின் இன்னொரு பிரிவினர். இவர்களின் அனுமானப்படி விசுவை களமிறக்கி விட்டிருப்பதே ஆளும்கட்சிதானாம். 23,000 தொழிலாளர்களின் வாக்குகள் அடங்கிய தேர்தல் என்பதால் நிச்சயம் ஆளும்கட்சியின் ஆதரவு பெற்றவர்கள்தான் வெல்ல முடியும் என்கிறார்கள் இவர்கள்.
இப்போதைய நிலவரப்படி தலைவர் பதவிக்கு அமீரும், பொதுச் செயலாளர் பதவிக்கு சிவாவும் ஜெயிக்கப் போவது உறுதி. கடைசி நேர ஆளும்கட்சித் தலையீடுகள் ஏற்பட்டால், விசு போராடி வெல்லாம்.
அமீர் நாமினேஷன் தாக்கல் செய்த காட்சிகள்...
அரசியல்வாதியாக மகுடம் சூடியிருக்கும் அமீரை வாழ்த்துகிறது கும்பல். அதேநேரம், இயக்குனர் பணியையும் அவர் செவ்வனே தொடர வேண்டும் என்பதே எல்லோருடைய வேண்டுகோளும்!
- கும்பல்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
+ comments + 3 comments
Athipagavanai kannula kattunga ameer sir....
அமீர் சார்.... இன்னிக்கு பெப்ஸி... நாளைக்கு சட்டமன்றம்... அப்புற,ம் ஜனாதிபதி... நாங்க கடைசி வரைக்கும் உங்களுக்கு போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்கணும்...
அமீருக்கும் விசுவுக்கும் கடுமையான போட்டி நிலவுவதாகச் சொல்கிறார்களே... உண்மையா? அமீர் ஜெயிப்பாரா... விசு ஜ்ஜெயிப்பாரா? அதிமுக ஆதரவு விசுவுக்கு இருப்பதாகச் சொல்கிறார்களே..
Post a Comment