ரஞ்சிதா உடனான படுக்கை அறைப் பதிவு சர்ச்சைகளில் இருந்தே சர்வ சாதாரணமாக மீண்ட நித்தியானந்தாவுக்கு இப்போது இடியாப்ப சிக்கல்! நித்தியை கர்நாடகத்தில் இருந்து விரட்டியே தீருவது என கர்நாடக அரசு தீவிரமாக இருக்கிறது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்த தகராறுக்கா இத்தனை கெடுபிடி என்றால், 'இது அப்பட்டமான மொழி மோதல்' எனப் பதில் சொல்கிறார்கள் பிடதி ஆசிரமக்காரர்கள்.
நித்திக்கு கர்நாடக அரசு கொடுக்கும் சிக்கலைக் காட்டிலும், கர்நாடகத்தில் உள்ள கன்னட தீவிர அமைப்புகளான கன்னட நவநிர்மாண் வேதிகா, ஜெய கர்நாடகா உள்ளிட்ட அமைப்புகள்தான் பெரிய சிக்கலைக் கொடுக்கின்றன. பிடதி ஆசிரமத்துக்குத் தினமும் சென்று கற்களை வீசியும், 'போலிச்சாமியே... தமிழ்நாட்டுக்கு ஓடு" எனக் கோஷமிட்டும் இந்த அமைப்புகள் அடாவடி புரிகின்றன. நித்தியின் உருவப் படங்களில் மலத்தைப் பூசி அசிங்கப்படுத்துகின்றன. கர்நாடக அரசு இத்தகைய வெறியாட்டங்கள் நிகழ்த்துபவர்களைக் கண்டிக்காமல், நித்தியை வளைத்தே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்த தகராறுக்கும், பிடதி ஆசிரமத்தை அரசே கையக்கப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? கர்நாடக சட்டத்துறை அமைச்சர் தொடங்கி கர்நாடக முதல்வர் வரைக்கும் ஏன் இந்த விவகாரத்தில் இத்தனை அக்கறையும் ஆவேசமும் காட்டுகிறார்கள்? மாநிலமே கொந்தளிக்கிற அளவுக்கு அப்படியென்ன முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை அது?
பாரம்பரியப் பெருமைமிக்க மதுரை மடத்தில் நித்தியை இளைய ஆதீனமாக நியமிக்க பல தரப்புகளில் இருந்தும் தீவிரமான எதிர்ப்புக் கிளம்பியது. பல இந்து அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மதுரை மடத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தன. கண்டன ஆர்ப்பாட்டங்களும், கோரிக்கைகளும் பெரிதாகக் கிளம்பின. இவ்வளவு பேர் கோரிக்கை வைத்தும், தனிப்பட்ட மத விவகாரத்தில் தலையிடாமல் தமிழக அரசு அமைதிகாத்து வருகிறது. ஆனால், நித்தியை வளைக்கவும், அவருடைய ஆசிரமத்தை வசப்படுத்தவும் கர்நாடக அரசு இவ்வளவு வேகம் காட்டுவது ஏன்?
பத்திரிக்கையாளர் விவகாரத்தை வைத்து மட்டும் பெரிதாக ஏதும் செய்ய முடியாது என்பதால், நித்தியின் பழைய சி.டி.க்களையும், தனிப்பட்ட விவகார பதிவுகளையும் கர்நாடக அரசு மறுபடியும் ஆராயத் தொடங்கி இருக்கிறது. நித்தியை சிக்க வைத்து தற்போது ஜெயிலில் இருக்கும் லெனின் கருப்பனையும் இதற்காக கர்நாடக போலீஸ் அணுகியிருக்கிறது. குறிப்பாக பழைய கண்ணழகி நடிகை ஒருவருடன் நித்தி அந்யோன்யமாக இருக்கும் பதிவுகளை கைவசப்படுத்தி நித்திக்கு சிக்கல் உண்டாக்க தீவிர முயற்சிகளில் இருக்கிறது கர்நாடக அரசு. நித்திக்கு எதிராகக் காய் நகர்த்தி வரும் ஆர்த்தி ராவ் வாக்குமூலத்தையும் கர்நாடக போலீஸ் தக்க கருவியாகப் பயன்படுத்தி வருகிறது.நித்தி ஒரு டுபாக்கூர் ஆசாமி என்பதில் நமக்கு எள்ளளவும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், இத்தனை காலம் நித்தியால் விளைந்த நன்மைகளை அனுபவித்துக் கொண்ட கர்நாடக அரசுத் தரப்பு, இப்போது திடீரென அவரை விரட்டியடிக்கக் காலம் பார்க்கும் பின்னணிதான் விசித்திரமானதாக இருக்கிறது. நித்தியானந்தா ஒரு தமிழர் என்பதைத் தவிர வேறு பெரிய பின்னணிகள் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த விதத்தில் மொழியின் பின்னணியாய் நித்தி வஞ்சிக்கப்படுவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
என்னதான் பெரிய அளவிலான பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதனை தனக்கான பப்ளிசிட்டி அம்சமாகவே பாவிப்பதுதான் நித்தியின் வழக்கம். இந்த பிரச்சனைகளையும் நித்தி அப்படியே தான் எடுத்துக் கொள்வார் என நம்புவோம்!


+ comments + 2 comments
nithi
nithi will have to face the public for all immoral things he has done
Post a Comment