Latest Movie :

நித்தியானந்தாவின் அடுத்த சி.டி.


மிரண்டு கிடக்கும் பிடதி ஆசிரமம்!

நித்தியானந்தாவை கைது செய்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது கர்நாடக அரசு. பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை பெயரளவுக்குப் பயன்படுத்தும் கர்நாடக அரசு, நித்தியானந்தாவை வசமாக சிக்க வைக்க, வேறு பின்னணிகள் தேடி அல்லாடி வருகிறது. இந்நிலையில்தான் நித்தியானந்தாவை ஏற்கனவே சிக்க வைத்த லெனின் கருப்பனின் துணையை கர்நாடக அரசு நாடியிருக்கிறது. பிடதி ஆசிரமத்தில் நடந்த சகல கூத்துக்களையும் படம் பிடித்து வைத்திருக்கும் லெனின் கருப்பன் கர்நாடக அரசுக்குப் பிடிகொடுக்காமல், மறுபடியும் நித்தியானந்தாவிடமே பேரம் நடத்துவதாகவும் சொல்கிறார்கள். 
கர்நாடக போலீஸ் எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும் என்கிற நிலையில், தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நித்தியானந்தா லெனின் கருப்பனை மறுபடியும் மடத்தில் சேர்த்துக் கொள்வதாக உறுதி அளித்திருக்கிறாராம். இதற்கிடையில், லெனின் கருப்பன் காட்டும் அடுத்த சி.டி.யில் சிக்கி இருப்பது யார் என்கிற கேள்வி பிடதி ஆசிரமத்தை உலுக்கத் தொடங்கியிருக்கிறது. 

''கர்நாடக அரசைத் தூண்டி விடுவது தமிழகத்தில் உள்ள சில முக்கிய நபர்கள்தான். நான் சட்ட ரீதியான ஆலோசனைகளை நடத்திவிட்டு, போலீஸ் அதிகாரிகளிடம் சரணடைவேன். கர்நாடகப் பத்திரிக்கையாளர்களை என் சிஷ்யர்கள் தாக்கவில்லை என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது. அதனால், திட்டமிட்டு என் மீது புனையப்பட்டிருக்கும் பொய் வழக்கை உடைத்து வெளியே வருவேன்'' என ஆவேசமாக சொல்லி வருகிறார் நித்தி.

பார்க்கலாம்... வெல்லப்போவது சி.டி.யா... வீடியோவா என்று!

- கும்பல் 
Share this article :

+ comments + 4 comments

11 June 2012 at 10:57

C.D-yai podunga samy....

Anonymous
11 June 2012 at 23:52

நித்தியானந்தாவை விட மாட்டாங்க போலிருக்கே... அவர் பாவங்க... நாலு பொண்ணுகளை சைட் அடிச்சோமா... சாமி கும்பிட்டோமா இருக்காரு... அதெயெல்லாம் நீங்க ஏன்யா சி,.டி.யா போடுறீக?

19 June 2012 at 05:56

nalla katturai...

நித்தியானந்தா பாவம்... அவரை விட்டிடுங்க ப்ளீஸ்...

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger