Latest Movie :

இது நித்தியானந்தா சபதம்!



''அத்தனை ஆதினங்களும் பாலியல் 

குற்றச்சாட்டில் சிக்குவார்கள்!''



தீனங்களுக்கும் நித்திக்குமான பனிப்போர் ஓய்வதாக இல்லை. நித்தியானந்தாவை மதுரை மடத்தின் மடாதிபதியாக பட்டம் சூட்டியதன் மூலம் சைவமும் இந்துத்துவமும் தீராத ககங்கத்துக்கு ஆளாகிவிட்டதாக அத்தனை ஆதீனங்களும் கொதிக்கும் நிலையில், அவர்களுக்கு பதிலடியாக மதுரையில் ஆவேசம் பாடினார் நித்தி.
''உண்மையான இந்துக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். பரபரப்புக்காக சிலர் என் மீது கல் வீசுகிறார்கள். அவர்கள் இந்துக்களே இல்லை. என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறும் ஆதீனங்களை எச்சரிக்கிறேன். உங்கள் மடத்தில் நடக்கும் அசிங்கத்தை முதலில் நீங்கள் உணர வேண்டும். உங்களின் அறையில் ரகசிய கேமிரா பொருத்தினால் உங்களின் அத்தனை வண்டவாளங்களும் அம்பலத்துக்கு வந்துவிடும். நீங்கள் என்னை சோதிக்க வேண்டுமெனில் என் அறையில் கேமிரா பொருத்திப் பாருங்கள். (ஏற்கனவே பொருத்திய கேமிரா பத்தாதா சாமி... நீங்களும் ரஞ்சிதாவும் அடிச்ச கூத்தை அகிலமே பார்த்த பிறக்கும் இப்படியொரு சவால்விட எப்படி சாமி மனசு வருது?) தனியார் துப்பறியும் நிறுவனத்தின் மூலமாகவும் என்னைக் கண்காணியுங்கள். என் நடத்தையில் எவ்விதத் தவறையும் உங்களால் சுட்டிக்காட்ட முடியாது. ஆனால், உங்களின் போலியான முகம் சீக்கிரமே அம்பலமாகும்!" என சகட்டுமேனிக்கு ஆவேசத்தை அள்ளி வீசியிருக்கிறார் நித்யானந்தா. 
தனக்கு எதிராக ஆதீனங்கள் அத்தனை பெரும் அணிதிரள்வார்கள் என நித்தியானந்தா கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனாலும், எத்தகைய மிரட்டலை எடுத்துவிட்டால் ஆதீனங்களை அடக்க முடியும் என்பதை அவர் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். ஆசியாவிலேயே மிகப் பெரிய மடமான திருவாடுதுறை மடத்தில்  சில வருடங்களுக்கு முன்பு கொலை முயற்சி நடந்ததும், அதன் பின்னணியில் பாலியல் குற்றச்சாட்டுகள் வெடித்ததும் பலருக்கும் நினைவிருக்கும். அதேபோல் காஞ்சி மடத்தில் சங்கரராமன் கொலை செய்யப்பட்டதும், அதையடுத்து தீராத கறையில் மடம் சிக்கியதும் பலரும் அறிந்ததே. ஆதீனங்கள் குறித்த இத்தகைய பின்னணிகளை எல்லாம் அள்ளிவிட நித்தியானந்தா தயாராகிவிட்டார். மொத்தத்தில், ஆன்மிகப் புள்ளிகளின் அத்தனைக் கதைகளும் வெளிக்கிளம்பி, தமிழக மக்களின் பொழுதுபோக்கு தீனியாகப் போவது மட்டும் நிஜம்!

- கும்பல்  
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger