காதலின் அழகியலையும் ஆத்மார்த்தத்தையும் அழுத்தமாகச் சொல்பவை தாமரையின் பாடல்கள். ஆனால், அவருடைய காதலும் ஆத்மார்த்தமுமே தற்போது அவதிக்குள்ளாகி இருக்கிறது. தாமரை - தியாகு மோதலை முதன்முறையாக நாம் சொன்னபோது, பலராலும் அதனை நம்பவே முடியவில்லை. சிலர், 'அப்படியொரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது' என்றார்கள் வேண்டுதலாக. ஆனால், இன்றைக்கு மீடியாக்கள் தாமரை - தியாகு மோதலை பிரித்து மேயத் தொடங்கிவிட்டன. அந்தரங்க விவகாரங்கள் என்றால் நம் மீடியாக்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன?
ஈழ ஆர்வலர்களாகவும் உணர்வாளர்களாகவும் ஒருமித்து இருந்த தாமரை - தியாகு இருவரும் இப்போது எதிரெதிர் கோணத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், ஈகோ, காதல், தவிப்பு என இரு தரப்புக்கும் இடையே நடக்கும் பனிப்போர் தான் எல்லோராலும் உற்றுக் கவனிக்கப்படுகிறது. தாமரையுடன் நல்லபடி வாழ்க்கை நடத்திய தியாகு திடீரென தடம் மாறினாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. விஜயலக்ஷ்மி என்ற பெண்ணையும் தியாகுவையும் மையப்படுத்திக் கிளம்பும் பரபரப்புகள் ஏராளம். பல மாதங்களாக அந்தப் பெண் தன் கணவரை விட்டுப் பிரிந்து சென்னைக்கு வந்து தியாகுவின் பராமரிப்பிலேயே தங்கிவிட்டதாக சொல்கிறார்கள். தியாகுவின் முதல் தாரத்து மகளான சுதாவும் விஜயலக்ஷ்மியும் சேர்ந்து தங்கி இருந்ததாகவும் தகவல்.
தாமரைக்கு ஆதரவாகப் பேசும் சிலர் இப்படி சொல்கிறார்கள்... ''தியாகுவுக்கு இப்போது எத்தனை வயதாகிறது? இந்த வயதில் எதற்காக திருமணமான ஒரு பெண்ணோடு அவர் தனியாக வாழ வேண்டும். இயக்க வேலைக்காக வெளியே தங்குவதாக தாமரையிடம் பொய் சொல்லிவிட்டு, விஜயலக்ஷ்மியோடு அவர் பல இடங்களுக்கும் ஏன் போக வேண்டும்? விஜயலட்சுமியை மகளுக்கு நிகரானவர் என சொல்லும் தியாகு, அந்தப் பெண்ணின் கணவரை மிரட்டியது ஏன்? தாமரையோடு சேர்ந்து வாழும் எண்ணம் இல்லாத தியாகு அதனை வெளிப்படையாக சொல்லி இருக்கலாம்... ஆனால், அப்படி செய்யாமல் தாமரை அவரைக் கொடுமைப்படுத்தியதாகவும், சித்திரவதை செய்ததாகவும் கிளப்பிவிட்டு, இவ்வளவு பெரிய சர்ச்சைகளுக்கு வித்திட்டது ஏன்?" என்கிறார்கள் தாமரையின் நிலைப்பாடு அறிந்தவர்கள்.
தியாகு தரப்பு விளக்கத்தை நமக்கு கடிதமாக அனுப்பிய நண்பர்கள் சிலரோ, ''விஜயலட்சுமிக்கும் தியாகுவுக்கும் தவறான உறவு எதுவுமே கிடையாது. தாமரை திட்டமிட்டு இப்படி கிளப்பிவிட்டு பரிதாபம் தேடப் பார்க்கிறார். முதல் மனைவியோடும், மகளோடும் தியாகு பேசத் தொடங்கியதுதான் இவ்வளவு பெரிய சிக்கலாகிவிட்டது. இன்றைய மீடியாக்களின் தன்மையை அறிந்திருந்தும் தாமரை இப்படி நடந்துகொண்டதை ஜீரணிக்கவே முடியவில்லை!" என்கிறார்கள் ஆதங்கமாக.
இதற்கிடையில், இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தையும் எட்ட, இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் விதமாக தாமரை தியாகு இருவரையும் போனில் பேச வைக்க சிலர் முயண்டார்கலாம். ஆனால், அந்த முயற்சி கைகூடவில்லையாம்.
ஈழ விவகாரத்தில் தீவிர ஆர்வலராக இருக்கும் சீமான் மீது இத்தகைய சர்ச்சை கிளம்ப காரணமாக இருந்த பெண்ணின் பெயரும் விஜயலக்ஷ்மிதான்! இப்போது தியாகுவை சர்ச்சையில் சிக்க வைத்திருப்பவரின் பெயரும் விஜயலக்ஷ்மிதான். என்னவொரு வேதனையான ஒற்றுமை!



+ comments + 1 comments
unmayan..KATHAL..eppothum..UDAYATHU..ivargal..KATHAL..unmaya poruthirunthu..,paarppom?
Post a Comment