இரண்டு மாதங்களாக போலீஸ் அதிகாரிகளுக்கு போக்குகாட்டி வரும் ராமஜெயம் கொலை வழக்கில் அடுத்த திருப்பம். சென்னையில் உள்ள மிகப் பிரசித்தியான ஜவளி நிறுவனத்தின் அதிபரை தற்போது வளைத்திருக்கிறது போலீஸ். குடும்ப ரீதியான விவகாரத்தில் ராமஜெயம் தலையிட்டதாகவும், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு அந்த ஜவளிக்கடை அதிபரின் குடும்பம் ஆளானதாகவும் விசாரணையில் கண்டுபிடித்து இருக்கிறது போலீஸ்.
நான்கெழுத்து ஜவளி நிறுவனத்தின் அதிபரை விசாரணைக்கு போலீஸ் அழைக்க, அவரோ ஆளும்கட்சியின் உயரிய இடத்தைப் பிடித்து ஜகா வாங்கிவிட்டாராம். 'அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றால், ஏன் ஆளும்கட்சியிடம் சரண்டர் ஆக வேண்டும்?' எனக் கேட்கிறது போலீஸ்.
இதற்கிடையில், ராமஜெயத்தின் பெண் தொடர்புகள் குறித்த தகவல்கள் மலை மலையாகக் குவிந்தபடி இருக்கிறதாம். காதல் திருமணப் பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, பின்னர் அவர்களுக்குள் பிரச்சனை வரும்போது சம்பந்தப்பட்ட பெண்ணை வசமாக்கி வைத்துக்கொள்வது என ராமஜெயத்தின் லீலைகள் தொடர்ந்திருக்கின்றன. (இறந்த ஒருவரைப் பற்றி தவறாக எழுதுவது நாகரீகம் அல்ல. ஆனாலும், போலீஸ் சோர்ஸில் சொல்லப்படும் தகவல்கள் அவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் நிலையில், அதனை வாசகர்களிடம் மறைப்பதும் நாகரீகம் இல்லைதானே...) ஜவளிக்கடை அதிபர் குடும்பத் தகராறிலும் இதே சிக்கல்தான் நடந்ததாம்.
பின்குறிப்பு: திருச்சியில் உள்ள பிரசித்தியான ஜவளி நிறுவனமான சாரதாஸை ஏற்கனவே போலீஸ் விசாரித்து முடித்தது. ராமஜெயத்துக்கும் சாரதாஸ் உரிமையாளருக்கும் நில விவகாரத்தில் இருந்த சிக்கலை ஊரே அறியும். இதற்காக இலங்கையில் உள்ள கூலிப்படைகளை வைத்து சாரதாஸ் அதிபர்தான் ராமஜெயத்தை கொன்றுவிட்டார் என ஆரம்பத்தில் செய்தி கிளம்பியது. போலீஸ் விசாரணைக்குப் பிறகு அது உண்மையல்ல என்பது புலனானது. இந்நிலையில்தான் இரண்டாவது ஜவளி அதிபர் சிக்கி இருக்கிறார்.
- கும்பல்

+ comments + 3 comments
Spr
ராமஜெயம் கொலை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் அனைத்தையும் கும்பல் மூலமாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த ஜவளிக்கடை அதிபர் யார் என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம்!
ராமஜெயம் கொலை நடந்து இரண்டு மாதங்களாகிறது. ஆனால் இன்று வரை கொலையாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது போலீஸுக்கு எவ்வளவு பெரிய அவமானம்? உளவுப்புலியாகச் சொல்லப்படும் ராமானுஜத்தால் ஒரு கொலை வழக்கைக்கூட துப்புத் துலக்க முடியவில்லை என்றால், அரசுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடுய மற்ற விசயங்களை இவரால் எப்படி கண்டுபிடிக்க முடியும்? ஸ்காட்லாந்து யார்டு போபீஸுக்கு நிகரானது தமிழ்நாடு போலீஸ் என புகழ் பாடிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
தேன்தமிழ் விமலநாதான்
Post a Comment