போலீஸ் மீது வழக்குப் போட முடிவு!
தொடர் வழக்குகளை முறியடித்து ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். 11 - ம் தேதி மாலை திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்த நடராஜன் தஞ்சாவூருக்குச் செல்வார் என போலீஸ் எதிர்பார்த்தது. ஆனால், திருச்சி கே.கே.நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கினார் நடராஜன். தன்னை சந்திக்க வந்தப் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடராஜன், ''இப்போதைக்கு ஏதும் பேசும் நிலையில் நான் இல்லை. நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? அரசியல் நிலவரங்கள் எப்படிப் போகின்றன?" எனக் கேட்டார். (சார் காமெடி ப ண்றாராம்) பத்திரிக்கையாளர்களை அனுப்பிவிட்டு தனது ஆதரவாளர்களிடம் பேசிய நடராஜன், தன் மீது பொய் வழக்குப் போட்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் போட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். (தைரியம் இருந்தா ஜெயலலிதா மேல வழக்குப் போட வேண்டியதுதானே...)
சசிகலாவின் தம்பி திவாகரன் ஏற்கனவே ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில், தற்போது நடராஜனும் வெளியே வந்திருக்கிறார். ஏற்கனவே ராவணனும் வெளியே வந்துவிட்டார். சசிகலாவுக்கும் அவருடைய உறவுகளுக்கும் இருந்த மனக்கசப்பு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதன் எதிரொலியாகவே அரசுத்தரப்பு கெடுபிடிகள் குறைக்கப்பட்டு உறவுகள் ஒவ்வொருவராக வெளியே வருவதாகவும் சொல்கிறார்கள்.
இதற்கிடையில் சசிகலா திடீரென கொடநாடு கிளம்பி இருக்கிறார். ஜெயலலிதா சென்னையில் இருக்க, சசிகலா மட்டும் கொடநாடு கிளம்பிப் போயிருப்பது உறவுகளை சமாதானம் செய்யத்தான் என்கிறார்கள் கோட்டை புள்ளிகள்.
- கும்பல்
நன்றி : கார்டூன் பாலா

+ comments + 4 comments
திவாகரன் கைதுகளை எல்லாம் விரிவாக எழுதினீர்கள், அவர் வெளி வந்ததை ஸ்க்ரோல்லிங்கில் மட்டும் தான் போட்டீர்கள், அவர் வெளிவந்ததை பற்றியும் விரிவாக எழுதுங்கள் நண்பரே!
- க.அறிவழகன்
திவாகரன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட நாள் தொடங்கி அவர் வெளியே வந்த வரையிலான அனைத்து விபரங்களையும் நம் கும்பல் குழு விசாரித்தது. சிறைக்குள் மௌனம் காத்த திவாகரனன், வெளியே வந்த பிறகும் ஆதரவாளர்களைச் சந்திக்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டு சென்னை அப்பல்லோவில் செக்கப்புக்காக அட்மிட்டாகி விட்டார். தடாலடியாகப் பதிலடி காட்டுவார் என நினைத்தால், அவர் அடங்கிப்போகும் பூனையாகவே மாறிவிட்டார். அதனால் தான் அவர் குறித்த கட்டுரை வெளியாகவில்லை நண்பரே... விரைவில், சசிகலா உறவுகள் குறித்த இதுவரை வெளிவராத தகவல்கள் தங்கள் பார்வைக்கு கும்பல் இணையதளத்தால் கொண்டுவரப்படும்!
சசிகலா உறவினர்கள் கைது, அழகிரி ஸ்டாலின் மோதல், காவல்துறை அதிகாரிகள் மாற்றம், ராமஜெயம் கொலை வழக்கு என தொடர்ந்து முக்கிய விவகாரங்களில் கும்பல் இணையதளம் சிறப்பான அதுவும் எந்த மீடியாக்களும் வெளியிடாத செய்திகளை வெளியிட்டு வருகிறது. திவாகரன் கைது செய்தியை முதல் முதலாக வெளியிட்டதும் கும்பல் தான். இதற்காக கும்பலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்., ஆனால், ராமஜெயம் கொலை வழக்கை போலீஸார் விசாரித்து முடித்துவிட்டதாகவும், விரைவிலேயே பெண் சம்பந்தமான பிரச்சனை வெளியாகும் என்றும் எழுதி இருந்தீர்கள்> அப்படியேதும் நடக்கவேயில்லையே... ராமஜெயம் வழக்கின் மர்மம் கும்பலையும் குழப்பிவிட்டதா?
தங்களின் தொடர் வாசகன்
மருதவேலன், வேலூர்

Post a Comment