சசிகலா ரீஎன்ட்ரி!
வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து கார்டனில் மீண்டும் கால் வைத்துவிட்டார் சசிகலா. 'இதைத்தான் அத்தனை மீடியாக்களும் எழுதிவிட்டனவே...' என்கிறீர்களா? சசிகலா வந்தார் என்பதைத்தான் அத்தனை மீடியாக்களும் எழுதின. ஆனால், சசிகலாவுக்கான வரவேற்பு வைபோகம் எப்படி இருந்தது தெரியுமோ?!
மிகச் சரியாக 3.45 மணிக்கு கார்டனுக்கு வந்தார் சசி. முக்கிய நபர்கள் மட்டுமே அப்போது கார்டனுக்குள் இருந்தார்கள். கார்டன் வாசலில் சசிகலா நிற்க, வெளியே வந்திருக்கிறார் ஜெயலலிதா. அடுத்தகணமே ஆரத்தி தட்டு ஓன்று எடுத்து வரப்பட்டிருக்கிறது. மஞ்சள் தண்ணீரும் வெற்றிலையும் இருந்த அந்த ஆரத்தி தட்டை கையில் ஏந்தி சுற்றியவர் யார் தெரியுமோ... சாட்சாத் அம்மாவேதான்!
அடுத்த அரை மணி நேரம் கார்டனில் பூஜை நடத்தப்பட்டிருக்கிறது. சசிகலாவும் ஜெயலலிதாவும் ஒருசேர அமர்ந்து அந்த பூஜையில் பங்கேற்று இருக்கிறார்கள். கார்டனில் இருந்த சசிகலாவுக்கு எதிரான சிலர் மூலமாக இந்த செய்தி வெளியே கசிய அமைச்சர்கள் பலரும் ஆடிபோய் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர்கள் அனைவரையும் அழைத்த முதல்வர் ஜெயலலிதா, 'சசிகலாவாலும் அவருடைய உறவுக் கூட்டத்தாலும் நீங்கள் எப்படிஎல்லாம் பாதிக்கப்பட்டீர்கள்... அவர்கள் உங்களை வைத்து எப்படிஎல்லாம் சாதித்துக் கொண்டார்கள் என்பதை கடிதமாக எழுதிக் கொடுங்கள்' என்றாராம். அதை நம்பி சசிகலாவுக்கு எதிராக அமைச்சர்கள் பலரும் குமுரிக்கொட்டி கடிதம் எழுதிக் கொடுத்தார்களாம். அனேகமாக அந்தக் கடிதங்களை ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒன்றாக அமர்ந்தே வாசிக்க வாய்ப்பிருக்கிறது. ஐயோ பாவம் அமைச்சர்கள்!
''வேப்பிலை அடிச்சதெல்லாம்
வீணா போச்சே..."
உபரித் தகவல்கள்...
- கும்பல்



+ comments + 1 comments
தகவல்களை மழையாகக் கொட்டுகிறது கும்பல் இணையதளம். உண்மையிலேயே தமிழக மீடியாக்களுக்கு சரியான போட்டிதான்... (கப்ஸாவில் அல்ல)
Post a Comment