Latest Movie :

கோச்சடையனுக்காக மொட்டை அடிக்கிறார் ரஜினிகாந்த்!




கோச்சடையன் படபிடிப்புக்காக அடுத்தபடியாய் மொட்டையடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். அனிமேஷன் மூலமாகவே மொட்டை கெட்டப்பை உருவாக்கலாம் என ஷூட்டிங் யூனிட் சொல்ல, ரஜினி அதனை மறுத்துவிட்டாராம். அதனால் ரஜினி மொட்டை அடிக்க இருப்பது உறுதி என்கிறார்கள். ஏற்கனவே ரஜினி மொட்டையாகத்தானே இருக்கிறார் என்கிறீர்களா... இந்தக் கிண்டல்தானே வேணாம்கிறது... 

தன் மகள் சௌந்தர்யா எடுக்கும் படம் மிக நன்றாக வர வேண்டும் என்பதற்காகத்தான் ரஜினி இந்தளவுக்கு ஈடுபாடு காட்டுகிறாராம். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா எடுத்த 'மூன்று' படம் தோல்வி அடைந்ததால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் ரஜினி, தன் இளைய மகளின் படமாவது வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறாராம். இதற்கிடையில் இன்னும் சிலரோ, ''ரஜினி மொட்டையடிக்க இருப்பது உண்மைதான்... அது அவருடைய தனிப்பட்ட வேண்டுதலுக்காகவே தவிர, ஷூட்டிங்காக அல்ல..." என்கிறார்கள்.
எது எப்படியோ... 'மூன்று' படத்தை போல் கொச்சடையானும் விநியோகஸ்தர்களை மொட்டை அடிக்காமல் இருந்தால் சரிதான்!

- கும்பல் சினிமா குழு 




Share this article :

+ comments + 2 comments

Anonymous
30 April 2012 at 01:30

3 padam moolam aishwarya dhanush motta poattanga....

Kochadaiyan la yum thalaivara motta adikka vachutaanga pa soundarya

30 April 2012 at 06:12

Super star vazhka... Kumbal ozhika!
S.RAVI

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger