ஆணுறுப்பை அறுத்துக் கொலை செய்திருக்கிறார்கள் நேரு தம்பி ராமஜெயத்தை. ஆனால், இந்த விஷயம் எந்த மீடியாவிலும் வெளியாகவில்லை. தமிழகத்தில் தா.கிருஷ்ணன், ஆலடி அருணா என படுகொலைக்கு ஆளான அரசியல் தலைவர்கள் பலர். ஆனால், இந்தளவுக்கு மிகக் கொடுரமாக யாரும் கொலையானது கிடையாது. பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட பல உண்மைகளை போலீஸ் மறைத்தாலும், ராமஜெயத்துக்கு மிக நெருக்கமான சிலராலேயே மரண மர்மங்கள் வெளியானபடி இருக்கின்றன.
வாக்கிங்... ஜோக்கிங்!
தினமும் காலை ஐந்தரை மணிக்கு வாக்கிங் செல்லும் வழக்கம் கொண்டவர் ராமஜெயம். ஆனால், சில தினங்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட காயத்தால் வாக்கிங் செல்வதை அவர் நிறுத்தி இருந்தார். அவர் குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் இது தெரியும். அப்படியிருந்தும் வாக்கிங் செல்லும்போது அவர் கடத்தப்பட்டதாக புகார் கொடுத்தது எப்படி? காலை ஐந்தரை மணிக்கு அவர் கடத்தப்பட்டதாக இருந்தாலும், அவர் கொலை செய்யப்பட்டு 10 மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது என பிரேதப் பரிசோதனை முடிவு சொல்வது எப்படி? ராமஜெயத்துக்கு மிக நெருக்கமான பலரிடமும் விசாரித்த பொது அவர் வாக்கிங் செல்லவில்லை என்பது அப்பட்டமாகிறது. அப்படியிருக்க, அவர் குடும்பத்தினரே வாக்கிங் போனார் என வலிந்து தவறான தகவல் சொல்வது ஏனோ?
கொடூரக் காயங்கள்!
ராமஜெயம் கொல்லப்பட்டுக் கிடந்த கோலம் மிகக் கொடூரமானது. போலீஸ் வெளியிடத் தயங்கும் விஷயங்கள் அப்படியே இங்கே... ராமஜெயத்தின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு, அவருடைய வாயில் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய முகத்திலும் தொடைகளிலும் சிகரெட் லைட்டரால் சுட்ட காயங்கள் இருந்தன. அவருடைய விதைப்பை கடுமையாக நசுக்கப்பட்டு இருந்தது. அவர் உடல் மீது கொலையாளிகள் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். வாயில் துணியைத் திணிப்பதற்கு முன் ஆசிட் அல்லது சயனைடு அவர் வாய்க்குள் திணிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் காரணமோ... போட்டி பொறாமையோ இந்தக் கொலையின் காரணமாக இருந்திருந்தால் கொலையாளிகள் இவ்வளவு கொடூரமாக நடந்திருக்க வாய்ப்பு இல்லை.
தனிப்பட்ட பெண் பஞ்சாயத்துகள்!
ராமஜெயம் கவனத்துக்கு வந்த பஞ்சாயத்துக்கள் அதிகம். அதில், குடும்ப ரீதியான புகார்களும் அதிகம். அந்த விதத்தில் முஸ்லிம் குடும்பம் சம்பந்தமான பஞ்சாயத்தில் ராமஜெயம் தலையிட்டதாகவும், இதனால் அந்தக் குடும்பப் பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, 'கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தன் கணவரோடு மன வருத்தமாகி ராமஜெயத்திடம் பஞ்சாயத்துக்கு வந்தார். அவருடைய கணவரும் பிரசித்தியான மருத்துவர் தான். அதன் பிறகு அடிக்கடி அந்தப் பெண் மருத்துவரை திருச்சியில் பார்க்க முடிந்தது. அதன் பின்னணியிலும் இந்தக் கொலை நடந்திருக்கலாம்' என்கிறார்கள் சந்தேகமாக. இதேபோல் நெல்லை பகுதியைச் சேர்ந்த ஒரு விவகாரமும் கிசுகிசுக்கப்படுகிறது.
கே.என்.நேருவுக்கே வெளிச்சம்!
கொலையாளிகள் நேருவின் நம்பர் கேட்டு பலருக்கும் போன் செய்ததாக மீடியாக்களில் செய்தி வந்தது அல்லவா... உண்மையில் நடந்தது வேறு. நேருவின் என்னைத் தொடர்புகொண்டு கொலையாளிகள் மிரட்டலாகப் பேசியிருக்கிறார்கள். 'உன் தம்பியை குப்பையாக்கிப் போட்டிருக்கிறோம்... வந்து அள்ளிக்கொண்டு போ...' எனச் சொல்லி இருக்கிறார்கள். இதனை மிக நெருக்கமான நண்பர்களிடம் சொல்லி கதறியிருக்கிறார் நேரு. அப்படிப்பார்த்தால், கொலையாளிகள் குறித்த தகவல் நிச்சயமாக நேருவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இதுநாள்வரை போலீஸ் அதிகாரிகளிடம் வாய்திறக்க மறுத்தபடி இருக்கிறார் நேரு. அவர் வாய் திறந்தால்தான் போலீஸ் அதிகாரிகளால் கொலையாளிகள் யார் என்பதை யூகிக்ககூட முடியும்!
என்ன எச்சரிக்கை?
ராமஜெயம் கொலையை இவ்வளவு கொடூரமாக அரங்கேற்றியத்தின் மூலமாக கொலையாளிகள் நேருவுக்கு எதோ சொல்ல நினைத்திருக்கிறார்கள். 'இனியும் அடாவடி நடத்தினால் எங்களின் பதிலடி இப்படித்தான் இருக்கும்' என்பதை சூசகமாக அவருக்கு விளக்கி இருக்கிறார்கள். கொலையான கொடூர விதம்... கொலை செய்யப்பட்ட விதம் ஆகியவற்றைப் பற்றி சொல்லும் அதிகாரிகள், 'இந்த முறையில் கொலை செய்யும் கும்பல் தமிழகத்தில் இல்லை. ஆனாலும், வெளி மாநில கும்பல் இதனை செய்திருக்க வாய்ப்பே இல்லை. தனிப்பட்ட மன ரீதியான கொடூரமே இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கும். ராமஜெயத்தின் உயிர்நாடியை நெரித்து அவரைக் கொலை செய்திருக்கிறார்கள். அதற்கு மேலும் அவரை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். அதனால், பெண் சம்பந்தமான விவகாரமே இதன் பின்னணியாக இருக்கும்!' என்கிறார்கள்.
- கும்பல்



+ comments + 6 comments
ராமஜெயம் அரசியலில் தலையீடு காட்டாதவராகத் தன்னை காட்டிக் கொண்டாலும், அவருடைய அடாவடிகள் கொடூரமானதாகத் தான் இருந்திருக்கின்றன. பல தி.மு.க.வினர் இந்தப் படுகொலைக்குப் பிறகு தான் நிம்மதியாக இருக்கிறார்கள். ராமஜெயம் பல சித்திரவதைகளுக்குப் பின்னரே கொல்லப்பட்டிருப்பது வேதனைக்குரியது தான். இருந்தாலும், அவரால் வேதனைப்ப்பட்டவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டுமே... தெய்வம் நின்று கொல்லும் என்பது தான் இது........
விரிவான அலசல் கட்டுரை... தமிழ் புலனாய்வு மீடியாக்கள் செய்யத் தவறியதை மிகச் சிறப்பாக விசாரித்து எழுதியிருக்கிறீர்கள். புலனாய்வு தொடரட்டும்!
அடப்பாவமே... இப்படியெல்லாம் சித்ரவதைகள் நடந்திருக்கிறதா? படிக்கவே நடுக்கமாக இருக்கிறதே... இது நாடா இல்லை சுடுகாடா?
excellent detailed report...... good keep it up
Innamum thuppu kidaikkaliye... Police appa ennathaan pannuthu?
Avan ketavan than irundhalum idhu romba koduram
Post a Comment