நம்ம சீனியர் சிட்டிசன் செய்தி வாசிக்க ஆரம்பிச்சிட்டார்... ரைமிங்கா டைமிங்கா அவர் அடிக்கிற கமெண்டுகளோடு செய்திகள் இனி அடிக்கடி களைகட்டும்...
''ம.தி.மு.க.வுக்கு என்று கொள்கைகள் ஏதும் கிடையாது"
- டாக்டர் ராமதாஸ்
''உங்ககிட்ட இருந்தா, கொஞ்சம் கொடுத்து உதவுங்களேன் டாக்டர்..."
''தனித்து நின்ருந்தால் இந்நேரம் ஆட்சியைப்
பிடித்திருப்போம்"
- டாக்டர் ராமதாஸ்
''இந்த வியாதிக்கு என்ன பேரு டாக்டர்?"
''என்னுடைய எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்க முடியாது!"
- கேப்டன் விஜயகாந்த்
''சும்மாவே வருவாங்கன்னு சொல்றாரோ.."
''வருகின்ற தேர்தலில் தே.மு.தி.க. ஆட்சியைப் பிடிக்கும்"
- கேப்டன் விஜயகாந்த்
''ஆட்சிங்கிறது என்ன அயல்நாட்டு தீவிரவாதியா... நினைச்ச உடனேயே பிடிக்கிறதுக்கு... போங்க கேப்டன்... போய் நாக்கை துருத்துங்க... ஸாரி நாட்டை திருத்துங்க"
ஏழு மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்
- செய்தி
''இந்த யுக்தியை கருணாநிதிகிட்ட இருந்துதானே கத்துக்கிட்டிங்க மன்மோகன்ஜி ..."
''ஒரு மாத காலமாக கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட்டு இருப்பதால் 750 கோடி ரூபாய் நஷ்டம்"
-மத்திய அமைச்சர் நாராயணசாமி
''1.76 லட்சம் கோடி நஷ்டமாகிறப்ப எல்லாம் இந்த புதுச்சேரி அமைச்சர் போதையில இருந்தாரோ என்னவோ?"
அம்மாவின் ஆயுள் நீடிப்பதற்காக ஒரு வாரம் விரதம் இருந்து மண் சோறு சாப்பிட்டார் அமைச்சர் கோகுல இந்திரா
- செய்தி
''ஆயுள் நீடிக்கவா... உங்க அமைச்சர் பதவி நீடிக்கவா?"







+ comments + 5 comments
Nice Thinking... Super Photo's... Congratz
சினிமா விசயங்களை அதிகமாக எழுதுங்கள். கமென்டுகள் சூப்பர்!
very well comments, in all thinks
publish more comments for all news, and nice to thinking in monkey photos comments...muthu mca annai
super appu...........
Post a Comment