விழுப்புரம் திருக்கோவிலூரில் போலீஸ் இருளர் பெண்களை கற்பழித்ததாகக் கிளம்பிய புகாரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதம்...
அரசு உள்துறை முதன்மை செயலாளர் ராஜகோபால்:
''திருக்கோவிலூர் மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி புகார் கொடுத்த பெண்களுக்கு நவம்பர் 29-ம் தேதி மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கற்பழிப்பு நடந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மருத்துவ அறிக்கையில் கற்பழிப்பு நடக்கவில்லை என சொல்லப்பட்டு உள்ளது!"
இருளர் ஆதரவு வக்கீல் புகழேந்தி:
''கற்பழிப்பு நடக்கவில்லை என்றால் அந்தப் பெண்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கியது ஏன்?"
அரசு வக்கீல்:
''அந்தப் பெண்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருந்தால்தான் அந்த நஷ்டஈடு வழங்கப்பட்டது!"
இந்த வழக்கில் தொடர்ந்து நடக்கும் குளறுபடிகளை நீங்களே அறிந்திருப்பீர்கள் வாசகர்களே... முதலில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த அரசுத்தரப்பு இப்போது கப்சிப்! இதற்கு குரல் உயர்த்தி நியாயம் கேட்டிருக்க வேண்டிய இருளர் தரப்பு வக்கீல் அரசு கொடுத்த ஐந்து லட்ச ரூபாய் எதற்கு என்கிறார்? ஐந்து லட்சம் கொடுத்ததற்காகவே பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் எனச் சொல்லச் சொல்கிறாரா? இல்லை, கொடுத்த ஐந்து லட்சத்தை அரசே திருப்பி வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிறாரா? அடுத்தடுத்தும் பல குளறுபடிகளை நோக்கிச் செல்லும் இந்த வழக்கு குறித்து தீர விசாரித்து 'கும்பல்' விரைவிலேயே தனி கட்டுரை எழுத இருக்கிறது. அது பல உண்மைகளின் தோலுரிப்பாக நிச்சயம் இருக்கும்!
- கும்பல்


+ comments + 4 comments
நல்ல அலசல் கட்டுரையாக வெளியிடுங்கள். யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் தண்டனையை அடைந்தே தீர வேண்டும்!
Karpukku arasi kannaki pirantha immannil.... karpukku vilai pesukiroam.... Enna koduma sir ithu
அன்னை அம்மா ஆட்சி வந்தாலே இப்படிபட்ட அட்டூலியங்கள் எல்லாம் நடக்கத்தான் செய்யும். அமோக வாக்களித்த மக்கள் நன்றாக அனுபவிக்கட்டும்.
விசாரணை நல்லபடி நடக்குமென நம்புவோம்!
Post a Comment