Latest Movie :

அழகிரி கிளம்பிய பின்னணி!


அண்ணன் கிளம்பிட்டாருங்கோவ்...

டங்கிக் கிடந்த அண்ணன் கிளம்பிட்டார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் முன் பக்கத்தையும் பின்பக்கத்தையும் மூடிக்கொண்டு கிடந்த அழகிரியார் இப்போது மெல்ல வாய் திறந்து இருக்கிறார். 'தலைவர் பதவி கிடைத்தால் தாராளமாக ஏற்றுக்கொள்வேன்' என விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்த போது அழகிரி வார்த்தைகளை விட, தி.மு.க. வட்டாரம் திகைத்துப் போனது. 'அண்ணன் மறுபடியும் ஆரம்பிச்சிட்டாருய்யா' என மதுரைப் புள்ளிகள் பரிவாரம் கட்ட, தளபதிக்கு நெருக்கமான சென்னைப் புள்ளிகள் கிலிபிடித்துக் கிடக்கிறார்கள்.

சும்மா கிடந்தவர் திடீரென வெகுண்டு எழுந்த பின்னணி எப்படி எனக் கேட்டால், 'இதுவும் கருணாநிதியின் ராஜ தந்திரம் தான்' என்கிறார்கள் கட்சியின் சீனியர் நிர்வாகிகள். 
கடந்த தி.மு.க. ஆட்சியின் போதே முதல்வராகி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் ஸ்டாலின். ஆட்சி முடிய ஒரு வருடம் இருந்தபோது ஸ்டாலின் கட்சியின் தலைவர் பதவிக்கு டிமான்ட் வைத்தார். ஆனால், அதைக் கொடுக்க கருணாநிதி துணியவில்லை. ஒருகட்டத்தில் ஸ்டாலின் தன் ஆதரவுப் புள்ளிகள் மூலமாக பிரஷர் கொடுக்க, கருணாநிதிக்கு மிகுந்த திண்டாட்டம் உருவானது. தலைவர் பதவி அல்லது முதல்வர் பதவி இரண்டில் ஒன்றை ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டிய இக்கட்டு உருவாக்கி விட்டதே எனத் தத்தளித்தார். ஆகாத மகனாக நினைத்த அழகிரியின் தயவு அப்போதுதான் கருணாவுக்கு தேவைப்பட்டது. உடனே அழகிரியை தட்டி விட்டார். டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த அழகிரி விமான நிலையத்தில், 'கருணாநிதியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்' என பரபரப்பு பேட்டி கொடுத்தார். அதை வைத்தே ஸ்டாலினுக்கு ஆப்பு வைத்தார் கருணாநிதி.

இன்றைக்கும் அதே நிகழ்வு தான் நடந்து இருக்கிறது. ஸ்டாலினுக்கு தலைவர் அல்லது செயல் தலைவர் பதவி கேட்டு சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஆரவாரம் கிளம்பியது. ஸ்டாலினுக்கு ஆதரவாக கிளம்பிய இந்தக் குரல் ஒருகட்டத்தில் ஆவேசக் குரலாகவும் மாறியது. வீரபாண்டியாரை விரட்டியது; அன்பழகனையும் அடக்கியது; இதில், கருணாநிதியே தடுமாறிப் போனார் என்பதுதான் உண்மை.
இனியும் ஸ்டாலினின் கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு தான் மீண்டும் அழகிரியை உசுப்பி விட்டிருக்கிறார் கருணாநிதி. இத்தனை காலம் மதுரையில் மல்லாந்து கிடந்த அழகிரி, திடீரென சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்புகிற பின்னணி இதுதான். 

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டுமல்ல... சொந்தக் கட்சியிலும் ராஜதந்திரங்களைக் காட்டுவதில் கருணாநிதியை மிஞ்ச ஆள் இல்லை என்பதற்கு இதைவிட என்ன உதா'ரணம்' வேண்டும்?

-கும்பல்    
Share this article :

+ comments + 5 comments

ஹி... ஹி... ஹி... பொட்டு சுரேஷ் தொடங்கி அட்டாக் பாண்டி வரைக்கும் அத்தனை பேரையும் ஜெயலலிதா உள்ளே தள்ளிய போது, டெல்லியில் பதுங்கிக்கொண்ட அழகிரி இப்போ ஜம்பம் அடிக்கிறார். கரை வேட்டி கட்டிய காமெடிப் பார்ட்டிப்பா!

Anonymous
16 February 2012 at 12:35

அழகிரியை பார்த்தால் கிரி பட வடிவேலு மாதிரியே இருக்கு... இவரு ஒரு தலைவரு... இவருக்கு இரண்டு டவசரு...

குடும்பப் பூசலிலேயே புதைகுழியாகப் போகிறது தி.மு.க. இதில் அழகிரி வந்தால் என்ன, ஸ்டாலின் வந்தால் என்ன... துரை தயாநிதிக்கு குழந்தை பிறந்து, அது வந்து அம்பல் செய்தால் கூட ஆச்சரியத்துக்கில்லை. அப்பாவி தி.மு.க. தொண்டன் அதையும் வேடிக்கைப் பார்த்து கைத்தட்டியபடி தான் இருப்பான்.

16 February 2012 at 19:36

தமாசுங்கோ... நல்ல தமாசு!

அழகிரி ஸ்டாலின் என்பதல்ல பிரச்சனை... நாடு முக்கியம் நாம் முக்கியம்!

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger