Latest Movie :

பாண்டிராஜின் அடுத்த படம் 'ஏழரை'


பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மெரீனா படம் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து - தம்கட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. 'நல்ல படம்... நிச்சயம் அவார்டு வாங்கும்...' என சிலரும், 'இதெல்லாம் ஒரு படமா... பாண்டிராஜ் பிசினஸ் நோக்கத்திலும் அவார்டு மோகத்திலும் எடுத்த மொக்கை படம்' என சிலரும் சொல்லி வருகிறார்கள். சமீப காலங்களில் எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இப்படி நேர் எதிரான விமர்சனங்கள் கிளம்பி இருக்காது.

ஆனால், இதையெல்லாம் சட்டையே செய்யாமல் அடுத்த படத்துக்கான வேலையில் இறங்கி விட்டார் பாண்டிராஜ். இவர் அடுத்தும் எடுக்க இருப்பது சின்னப்பையன்கள் சம்பந்தமான கதைதான். படத்துக்கு தலைப்பு 'ஏழரை' . இந்தப் படத்தில் ஏழரை வயதுப் பையனை மையமாக வைத்து கதை பின்னப்பட்டு இருக்கிறதாம். இதுதவிர, சின்னக்குழந்தைகள் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று கதைகள் பாண்டிராஜ் வசம் இருக்கிறதாம்.

- ஏ. ஆர். எம்.தாஸ்
Share this article :

+ comments + 8 comments

14 February 2012 at 19:59

ஏழரை ஆரம்பம்.....!

14 February 2012 at 20:04

மெரினாவிலேயே பாண்டிராஜின் பலம் என்னவென்று தெரிந்து விட்டது. அவார்டு ஆசை வந்தால் கோவில் படத்தில் வடிவேலு செய்வதைப்போல் ஏதாவது ஒரு பாத்திரக் கடைக்குப்போய் வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே... ஏன் இப்படி மொக்கை படம் எடுத்து நம்மை படுத்த வேண்டும்? காட்சியமைப்பு தொடங்கி உரையாடல் வரை எதுவுமே மனதை ஈர்க்காத இந்தப் படத்துக்கே 'ஏழரை' என டைட்டில் வைத்திருக்கலாம்! நல்லா கெளப்புறாய்ங்கடா பீதியை...

14 February 2012 at 20:09

வேண்டாம் இந்த விபரீதம்... மெரினா பார்த்த பிறகு பசங்க படத்தின் மீதிருந்த மரியாதையே போயிடுச்சு. புதுக்கோட்டைக்குப் போயி பொழப்ப பாருங்க மிஸ்டர் பாண்டி...

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே... நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே... இந்த மாதிரி ஏதாச்சும் பாட்டுப் போட்டு புள்ளைங்களுக்கு அறிவுரை சொல்லுங்க பாண்டி சார்... சுண்டலும் கிண்டலுமா படம் எடுத்து கடைசியில் 'எல்லாரும் படிக்கப் போங்க'ன்னு சொல்றீங்க... முதல்ல நீங்கதான் நல்ல படம் எப்படி எடுக்கணும்கிறதை எங்கேயாச்சும் போய் படிக்கணும்! மனசுல தோண்றியதை சொல்லிட்டேன்... ஏன்னா, கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த உங்களை மாதிரி ஆட்களை எனக்குப் பிடிக்கும் சார்!

15 February 2012 at 12:01

பாண்டியராஜ் எடுத்த மெரினா நல்ல படம் தான்... இன்றைக்கும் படிக்க வழியில்லாமல் மெரினாவில் காய்ந்து திரியும் சிறுவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களின் நிலையை மெரினா நிச்சயம் வெளியுலகுக்குச் சொல்லும். அவருடைய அடுத்த படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்!

16 February 2012 at 14:00

Ezharai enkira title sari illai. Matri yosinga sir.

17 February 2012 at 02:30

MERINA MOVIE GOOD SIR SO DONT WORRY SIR WE R WAITING FOR U R NEXT PROJECT

kalai
17 February 2012 at 23:00

nice movie pandiraj sir... u r satisfied our expectations. so u will do dat in 7 1/2 also.i wish u all best sir...

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger