Latest Movie :

இந்த வார கும்பல் விருது!


இந்த வார கும்பல் விருது!




னுதினமும் இந்த அன்னை மண்ணில் நடக்கும் குறிப்பிடத்தக்க சம்பவங்களுக்கு குறைவு இல்லை. நல்லது கெட்டதுகளை சீர்தூக்கிப் பார்த்து வாரம் ஒருவருக்கு சிறப்பு விருது கொடுக்க 'கும்பல்' முடிவு செய்திருக்கிறது. நல்ல விசயங்களை பாராட்டும் விதமாகவும், குணக்கேடுகளைக் குட்டும் விதமாகவும் நம்முடைய தேர்வு அமைவது அவசியம். இந்த வாரம் சிறப்பு விருதுக்கு உரிய நபரை கும்பல் குழுமமே தேர்வு செய்திருக்கிறது. அடுத்த வாரத்தில் இருந்து விருதுக்கு உரியவர்களை வாசகர்களே சிபாரிசு செய்யலாம். 

இந்த வார விருதுக்கு உரியவர் யார் என்கிற ஆவல் உங்களைப் படபடக்க வைக்கிறதா? மனத்தைக் கொஞ்சம் தேற்றிக்கொள்ளுங்கள். கும்பல் கொடுக்கும் முதல் விருது ஒரு சிங்கள நபருக்கு! ஆம்; இலங்கை வீட்டு அமைப்பு அமைச்சராக இருக்கும் விமல் வீரவன்ச் கும்பல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். 'இது நியாயமா கும்பல்?' என நீங்கள் கேட்பது புரிகிறது.


கடந்த வாரம் விமல் வீரவன்ச் பேசிய வார்த்தைகளை கீழே படியுங்கள்...

''ராஜீவ் காந்தியைக் கொன்றது பிரபாகரன் இல்லை. ராஜீவைக் கொன்றால், அதற்கான விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பிரபாகரனுக்கு நன்றாகத் தெரியும். எதுவும் தெரியாத முட்டாள் அல்ல பிரபாகரன். ஆசிய அளவில் நேரு, இந்திரா காந்தி பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இந்தியாவை ஆளும் வரை தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முடியாது என எண்ணிய அமெரிக்காவின் சி.ஐ.ஏ. நிறுவம் தான் பிரபாகரனுக்குத் தெரியாமல், தமிழ்நாட்டில் இருந்த இலங்கைத் தமிழர்களை வைத்து ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது!"

இதே விமல் வீரவன்ச் சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எதிராக பேசிய பேச்சையும் கீழே படியுங்கள்...

''இலங்கையில் நடந்த இன அழிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசுகிறார். நாங்கள் செய்தது இன அழிப்பு என்றால், இந்திய அமைதிப் படை என்ற பெயரில் நீங்கள் அரங்கேற்றிய கொடுமைகளுக்கு என்ன பெயராம்?"

சிங்களத் தாண்டவம் கொண்டவராக விமல் வீரவன்ச் இப்படிப் பேசினாலும், இந்தியாவின் கேடுகெட்ட புலனாய்வையும், புத்திக்கூர்மையற்ற தனத்தையும் அவர் விட்டு விளாசும் விதத்துக்காகவே இந்த விருதை கும்பல் அவருக்குப் பெருமையோடு வழங்குகிறது. 

குறிப்பு: விருது அறிவிப்பு குறித்த இந்தப் பக்கமும், தனியே ஒரு கடிதமும் கும்பல் சார்பாக இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 


- கும்பல்



Share this article :

+ comments + 5 comments

Anonymous
19 February 2012 at 00:56

இந்த வார விருதை இயக்குனர் சசிக்குமாருக்கு கொடுத்து இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆவலோடு பார்த்து ஏமாந்து போனோம். யாரு சார் இந்த அமைச்சர்? பேரும் விளங்கலை... முகமும் புரியலை... ஆனாலும், பிரபாகரன் குறித்து அவர் பேசியிருக்கும் பேச்சு சூப்பர்! வாழ்த்துக்கள் இலங்கை அமைச்சர் 23 வது புலிகேசியே...

குமார், வேந்தன், முபாரக்

மிகச் சரியான தேர்வு... இந்திய அரசுக்கு சவுக்கடி கொடுத்த ஒரு மனிதரை தேர்வு செய்து எங்களின் யூகங்களை பொய்யாக்கி விட்டீர்கள். அடுத்த வாரம் யாராக இருக்கும் என இப்போதே யோசிக்கத் தொடங்கி விட்டோம்.

அடுத்த வாரம் சசிகுமார்....

ஜம்பம் காட்டிய நடராஜனை தைரியமாக உள்ளே தூக்கி போட்ட ஜெயலலிதாவுக்கு தான் இந்த வார விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

22 February 2012 at 06:13

அரசியல் அரங்கில் அயாராது பாடுபடும் வை.கோ.வுக்கு தான் அடுத்த வார கும்பல் விருது கொடுக்கப்பட வேண்டும். கூடங்குளம் தொடங்கி ஈழ விவகாரம் வரை இன்றைக்கும் மக்கள் நலனுக்காக முன்னிற்கும் தலைவர் அவர் ஒருவர் மட்டுமே!

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger