தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்...
தமிழக அரசுக்கு வெள்ள நிவாரணத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக புதன்கிழமை காலை 7 மணிக்கு கருணாநிதி கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
கேள்வி: வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?
பதில்: தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி மக்கள் அதிருப்தியாக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த பிறகு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கூறுகிறேன்.
கே: மத்திய அரசிடம் கூடுதல் நிதி வேண்டும் என்று கேட்பீர்களா?
ப: நான் இப்போது மாநில அரசின் தலைவன் இல்லை. மத்திய அரசிடமிருந்து என்னென்ன கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்ல முடியாது.
கே: உங்களுடைய கூட்டணி கட்சி என்ற முறையில் மத்திய அரசிடம் உங்கள் அமைச்சர்களை என்னென்ன உதவிகளைக் கேட்கச் சொல்வீர்கள்?
ப:வெள்ள நிவாரணத்துக்குத் தேவையான உதவிகளை எல்லாம் மத்திய அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவேன் என்றார் கருணாநிதி.
Labels:
Daily thanthi,
Dinakaran,
Dinamani,
kumbal,
Power Plant,
இந்தியா,
கும்பல்,
தமிழகம்,
தினகரன்,
தினத்தந்தி,
தினமணி

Post a Comment