ஜெயலலிதாவுடன் பேசினாரா சசிகலா?
'இதோடு முடிந்தது' என ஜெயா - சசி உறவை பற்றி தமிழ் மீடியாக்கள் வர்ணனை செய்தபடி இருக்கின்றன. ஆனால், பிரிவு நிகழ்ந்த இரண்டாவது நாளே இளவரசியின் மகள் பிரியாவின் வீட்டில் இருந்தபடி ஜெயலலிதாவுடன் சசிகலா போனில் பேசி விட்டதாக உறுதியாக சொல்கிறார்கள் மன்னார்குடி உறவுக்காரர்கள்.
சசிகலாவை விட்டு நிரந்தரமாக பிரிய வேண்டும் என்பதற்காகத்தான் அவரை மட்டும் அல்லாமல், அவர் உறவுக்காரர்கள் பலரையும் ஒருசேர வெளியே அனுப்பினார் ஜெயலலிதா. நீக்கப் பட்டியலில் இடம் பெறாத சசிகலாவின் அண்ணி இளவரசியையும் வெளியே அனுப்பினார் ஜெயா. தினமும் காலை பத்து மணிக்கு வந்து மாலை ஆறு மணிக்குள் வீட்டுக்கு போய்விடும்படி அவருக்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகளான அனுராதாவும் அடிக்கடி கார்டனுக்குப் போகிறார். சசிகலாவுக்கு தூதுவர்களாக இவர்கள் இருவர் மட்டுமே இப்போது இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் சசிகலா தொலைபேசியில் ஜெயலலிதாவிடம் பேசிவிட்டதாகவும், அவர்கள் இருவருக்கும் இடையே சீக்கிரமே நல்லிணக்கம் ஏற்படும் என்றும் அனுமானங்கள் அலையடிக்கின்றன. இன்னும் சிலரோ, 'இதெல்லாம் எம்.நடராஜன் கிளப்பி விடுபவை.. சசி - ஜெயாவுக்கு இடையே இனி எந்த காலத்துக்கும் உறவு ஏற்படாதபடி பிராமணர்கள் பெரிதாக வலையை விரித்து விட்டார்கள். சீக்கிரமே அம்மாவை சுற்றி இருக்கும் ஐ. ஏ. எஸ் மற்றும் ஐ.பி.எஸ். பதவிகளுக்கு பிராமண அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள். அதன் பிறகு சசி கும்பலால் ஜெயலலிதாவை அணுகவே முடியாத நிலை வந்துவிடும்' என்கிறார்கள் உறுதியாக.
சசியின் உறவினர்களோ, அடுத்த ஒரு மாதத்துக்குள் சசிகலா மீண்டும் கார்டனில் நுழைவார் என்கிறார்கள் நம்பிக்கையோடு.

Post a Comment