அதர்வாவுக்கு நான் செய்த கடமையாகத்தான் பரதேசி படத்தைப் பார்க்கிறேன் - இயக்குநர் பாலா.
அதர்வாவின் வித்தியாசமான நடிப்பிலும், பாலாவின் இயக்கத்திலும் உருவாகியுள்ள படம் "பரதேசி". இப்படத்தை பற்றி பாலா கூறியதாவது ;
பொதுவாகவே நான் செண்ட்டிமெண்ட் பார்க்காதவன் என்பவன் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே படத்தின் தலைப்பு சென்ட்டிமென்ட்டாக வைக்கப்பட்டதா என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.இதுவரை காட்டுமிராண்டி தனமாக நான் படங்களை எடுத்துள்ளேன். ஆனால், என்னுடைய அடுத்த படம் அப்படி இருக்காது. அதற்கு காரணம் என் குழந்தை. அவளோடு இருக்கும்போது ஏதோ புது உலகில் இருப்பதுபோல் இருக்கிறது. என் கோபம், என்னுள் இருந்த கவலைகள் அனைத்தையும் துரத்தியவள் அவள். விரைவில் குழந்தைகளுக்கான கதையை எழுதி நிச்சயம் படம் எடுப்பேன். அதர்வாவ பற்றி சொல்லவேண்டியதில்லை. அவங்க அப்பாவ மாதிரியே அமைதி.அதர்வாவிற்கு நான் செய்யும் கடமையாகத்தான் இந்தப்படத்தில் அவனை நடிக்க வைத்தேன். அவன் நடிப்பே ஒரு தனி அடையாளமா தெரியும். இந்த படத்துல ஆரம்பத்துல அவன் எப்படி நடிப்பானு நெனச்சன் ஆனா, இன்னைக்கு என்னைய அவனோட ரசிகனாவே மாத்திட்டான்.ஜி.வி.பிரகாஷூம் அதிகம் பேசாதவன்; நானும் அதிகம் பேசாதவன். அதனால் எப்படி அவனிடம் மியூசிக் வாங்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். படம் முழுவதையும் எடுத்து முடித்து அவனுக்கு போட்டுக் காண்பித்தேன். இதற்கேற்றார் போல் மியூசிக் வேண்டும் என்று கேட்டேன். அது மாதிரியே போட்டுக் கொடுத்து விட்டான்.
வைரமுத்து சாருக்கு படத்தைப் போட்டுக் காண்பித்து இதற்கேற்றார் போல் பாடல்கள் வேண்டும் என்று கேட்டேன். அவர் மூன்று நாட்கள் கழித்து என்னை அழைத்தார். பாடல் வரிகள் அடங்கிய காகிதங்களை என்னிடம் கொடுத்துவிட்டு, இது ரத்தத்தால் எழுதப்பட்ட வரிகள். ஒரு வரி கூட மாறக்கூடாதுஎன்று கூறினார்.
மதுரைப்பக்கம் எப்பவுமே கொஞ்சம் நகைச்சுவையாகத்தானே பேசுவார்கள். அதனால் நானும் சிரித்துக் கொண்டே வாங்கினேன். ஒருவேளை மை தீர்ந்து போய் ரத்தத்தால் எழுதியிருப்பாரோ என்று கூட சிரித்துக் கொண்டேன்.ஆனால், வீட்டுக்கு வந்து பாடல் வரிகளை படித்துப் பார்த்தபோதுதான் அவர் சொன்னது உண்மை என புரிந்தது. அத்தனை பாடல்களும் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது. அது, இந்தப் பாடல்களை கேட்கும்போது உங்களூக்கே தெரியும் என்றார் பாலா.
.jpg)
Post a Comment